உத்தேச பரீட்சை திகதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது

 

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர் தரப் 2021 பரீட்சைக்கான திகதிகளை கல்வி அமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். 

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை ஒக்டோபர் 3 ஆம் திகதியும் உயர் தரப்பரீட்சையை ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையும் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சின் செயலாளர் ஹிரு செய்திகளுக்கு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக நியுஸ்வயர் பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொண்டு விசாரித்த போது, நிலமைகளை கருத்திற் கொண்டு கல்வி அமைச்சு இறுதித் தீர்மானத்தை அறிவிக்கும் என்று பதிலளித்தனர். 

நேற்று பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பரீட்சையை குறிப்பிட்ட திகதியில் நடாத்துவதா இல்லையா என்பது தொடர்பாக கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

Post a Comment

0 Comments