சைனோபாம் தடுப்பூசி தொடர்பில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளிவந்த மகிழ்ச்சியான தகவல்


சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சைனோபாம் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களில் 95 % மானோரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருவதாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது இந்த விடயம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சைனோபாம் தடுப்பூசி உலகளாவிய ரீதியில் பரவி வரும் டெல்டா திரிபுக்கு எதிராக செயற்படக் கூடியது என பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments