பிக் ஜேக் என்ற உலகின் மிக உயரமா குதிரை இறப்பு


போய்னெட்டில் (Poynette) உள்ள Smokey Hollow பண்ணையில் வாழ்ந்துவந்த 20 வயதான உலகின் மிக உயரமான பெல்ஜியக் குதிரையான பிக் ஜேக், அமெரிக்காவின் விஸ்கோன்ஸ் மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு இறந்துவிட்டது.

கிட்டத்தட்ட 2.1 மீற்றர் உயரமுள்ள இதன் எடை 1,136 கிலோகிராம். கின்னஸ் உலக சாதனைப் புத்தகம், 2010ஆம் ஆண்டில் பிக் ஜேக்கை உலகின் மிக உயரமான உயிருள்ள குதிரை என்று சான்றளித்தது.

பிக் ஜேக் ஒரு "சூப்பர் ஸ்டார்" என்றும் "உண்மையிலேயே அற்புதமான விலங்கு" என்றும் உரிமையாளர் ஜெர்ரி கில்பர்ட் கூறினார். பிறந்தபோது அதன் எடை 109 கிலோகிராம். ஒரு சராசரி பெல்ஜியக் குதிரைக்குட்டியைவிட அதன் எடை 45 கிலோகிராம் அதிகம்.

பிக் ஜேக்கின் நினைவாக அது இருந்த இடத்தைக் காலியாக வைத்து, அதன் படம், பெயர் கொண்ட செங்கல்லை வெளியே நிறுவத் திட்டமிட்டுள்ளதாகத் திரு ஜெர்ரி கூறினார்.

Post a Comment

0 Comments