புதுவிதமான மரண தண்டனை மேலதிக தகவல் உள்ளே....

 


உலகின் மிக கொடூரமான குற்றங்கள் செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கம்.

அண்மையில் பாகிஸ்தானில் இரண்டு நாய்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் பாகிஸ்தானில் மூத்த சட்டத்தரணி ஒருவர் நடைப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக வீதியில் நடந்து சென்றபோது, அங்கிருந்த இரண்டு நாய்கள் குறித்த சட்டத்தரணியை தாக்கியுள்ளன.

இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தது.

இந்த காணொளி வைரலான நிலையில் இது குறித்து அந்த நாய்களின் உரிமையாளர் மீது சட்டத்தரணி வழக்கு பதிவு செய்தார். எனினும் நாய்களின் உரிமையாளருக்கும் சட்டத்தரணிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் சில நிபந்தனைகளை முன்வைத்த சட்டத்தரணி வழக்கை மீளப் பெற்றுக்கொண்டார்.

தன்னை அவரது நாய்கள் தாக்கியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இனிமேல் அவர் ஆபத்தான மற்றும் கொடூரமான மிருகங்களை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்க கூடாது. அத்துடன் இந்த இரண்டு நாய்களையும் உடனடியாக கொலை செய்ய வேண்டும் என நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

இந்த நிபந்தனைகளை நாய்களின் உரிமையாளரும் ஏற்றுக் கொண்டதால் இந்த வழக்கு தொடரப்படவில்லை.

எனினும் இந்த விவகாரம் தற்போது பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. நாய்களை கொலை செய்ய ஒப்பந்தம் போட முடியாது என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments