நடந்தது என்ன? ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாடடு தொடர்பாக நேற்றைய அமைச்சரவையில்


ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் கல்வி அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரம் நேற்றைய அமைச்சரவையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேற்படி சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் கடந்த வாரம் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸினால் அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒருவார கால அவகாசத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரியிருந்தார். அதற்கிணங்க மேற்படி அமைச்சரவைப்பத்திரம் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை கடந்த வாரம் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த வார அமைச்சரவையில் ஆராய்ந்து மேற்படி சம்பளம் முரண்பாட்டுக்கு தீர்வு காண வழிவகை செய்யப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, அதிபர், ஆசிரியதொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் 20 நாட்களை கடந்தும் தொடரும் நிலையில் மாணவர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments