கோல்பெர்க்ஸின் ஒழுக்க வளர்ச்சி நிலைகள் (Kolherberg’s Stages of Moral Development)

 கோல்பெர்க்ஸின் ஒழுக்க வளர்ச்சி நிலைகள் (Kolherberg’s Stages of Moral Development)

ஜான் டூவி மற்றும் ஜீன் பியாஜயின் தாக்கத்தால் ஒழுக்க வளர்ச்சி நிலைகளுடைய அறிவுப்புல வளர்ச்சி தொகுப்பினை கோல்பெர்க் 1971 ல் வெளியிட்டார். அவருடைய கருத்துப்படி எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரியான நிலைகளையே பின்பற்றுகின்றனர்இ ஆனால் புலமையை அடையும் விகிதத்தில் பல்வேறு நிலைகளில் மாறுபடலாம். மேலும் ஒரு குழந்தையை உயர்நிலைக்கு தயார் செய்ய எவராலும் கற்றுக் கொடுக்க முடியாது. ஆனால்இ குழந்தை தயாராக இருந்தால் அது அடுத்த உயர் நிலைக்குச் செல்ல அக் குழந்தையைத் தூண்டுவதன் மூலம் நாம் உதவ முடியும். அரசியல்இ தத்துவம்இ நீதி மற்றும் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் ஒரு குழந்தையை உயர் ஒழுக்க நிலைக்கு தூண்டச் செய்ய முடியும் என கோல்பெர்க் நம்புகிறாhர். பல்வேறு கலாச்சாரங்கள் பல்வேறு வழிகளில் ஒழுக்க மதிப்பினை நமக்குத் தருகிறது என்பதனை இதன் மூலம் நாம் உணரலாம். பொதுவாக இதன் உச்ச மதிப்பு ஒன்றாகத் தான் இருக்கும். இவ்வாறாக பள்ளியின் முக்கிய நோக்கம் குழந்தைகளை கீழ் ஒழுக்க நிலையிலிருந்து மேல் ஒழுக்க நிலைக்குச் செல்ல உதவுவதே ஆகும். கோல்பெர்க்கின் ஒழுக்க நிலைகளில் குழந்தையின் செயல்முறை முன்வளர்ச்சி நிலையில் கலாச்சார பண்புகளுக்கு பொறுப்பான நிலையிலிருந்து வளர்ச்சியின் மூலம் தண்டனை குறித்த பயன் நிலையான மனப்பான்மை சமூக ஒழுக்கம் மூலம் மதிப்புகளை பெறுதல். தனக்கு எது சரி எனப்படுகிறதோ அதைச் செய்தல். வளர்ச்சி நிலையில்இ தன்னிட்சையான நிலை எங்கு ஒழுக்க மதிப்புகள் மற்றும் கோட்பாடுகள் அதிகாரத்திலிருந்து விலகி ஏற்புடையதாகிறதோ அதுவே ஆகும்.

கோல்பெர்க் (Kholberg) இவ்வணுகுமுறையில் மதிப்புணர்வு கற்பித்தலை மூன்று நிலைகளாக வகைப்படுத்தி உள்ளார். ஒவ்வொரு நிலையும் 2 படி நிலைகளைக் கொண்டவை ஆகும். அவரால் வகைப்படுத்தப்பட்ட 3 நிலைகள்.

1. வழக்கமான நிலைக்கு முன்பு  (Pre-Conventional Level)

2. வழக்கமான நிலை (Conventional Level)

3. வழக்கமான நிலைக்கு பின்பு (Post Conventional Level)

என்று அழைக்கப்படுகின்றன. இவற்றிற்கான விளக்த்தினைக் காணலாம்.

1. வழக்கமான நிலைக்கு முன்பு (Pre conventional Level)

குழந்தையானது பிறந்ததிலிருந்து இரண்டு அல்லது மூன்று வயதாகும்வரை ஏற்படக் கூடிய நடத்தை மாற்றங்களையும், அவை மதிப்புணர்வுகளோடு கொண்டுள்ள தொடர்புகளையும் கோல்பெர்க் விவரித்துள்ளார். குழந்தையானது பெற்றோர்களிடம் இருந்து நல்லவை தீயவை, செய்யத் தகுந்தவை தகாதவை என வேறுபடுத்தி அறியக் கற்றுக் கொள்கின்றது. இவ்வறிவாற்றலானது இரண்டு படி நிலைகளின் மூலம், குழந்தையின் செயல்பாடுகளின் வழி வெளிப்படுகிறது.

படிநிலை 1

குழந்தையானது பெற்றோர்களின் மூலம் எவ்வாறு பேச வேண்டும், உணவு உண்ண வேண்டும், பழக வேண்டும் என்று கற்றுக் கொள்கிறது. பெற்றோர்கள் குழந்தைகளின் நற்செயல்களை வார்த்தைகளைக் கொண்டும் பரிசுகள் அளித்தும் ஊக்குவிக்கின்றனர். இந்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகளின் தவறான செயல்களை ஆக்கபூர்வமாகத் திருத்த வேண்டும்.

படிநிலை 2

இந்நிலையில் குழந்தையானது தன்னுடைய தேவைகளை வெளிப்படுத்தவும், தாமே செயலினைச் செய்யவும் ஆரம்பிக்கின்றது. அச்செயலானது நன்னெறியுடன் கூடியதாக இருப்பின் பெற்றோர்கள் அதனை ஊக்கப்படுத்துகின்றனர். (உ-ம்) தண்ணீரைச் சிந்தாமல் பருகுதல், தன்னுடைய விளையாட்டுப் பொருள்களை உரிய இடத்தில் வைத்தல்.

2. வழக்கமான நிலை (conventional Level)

இந்நிலையில் குழந்தையானது இல்ல உறுப்பினர்கள், சமூகத்தினரால், அங்கீகரிக்கப்படுகின்ற செயல்களை செய்ய கற்றுக் கொள்கின்றது. குழந்தையின் 3-4 வயதில் இந்நிலை காணப்படுகிறது.

படிநிலை 3

இந்நிலையில் குழந்தையானது பெற்றோர், உறவினர்களிடமிருந்து பாராட்டுதலை எதிர்பார்க்கின்றது. (உ-ம்) நல்ல மதிப்பெண்களை பெறும்போது தாய் தந்தையினர் பாராட்டுதல்.

படிநிலை 4

பள்ளியில் ஆசிரியர்கள், சக வகுப்பினர், நண்பர்களிடம் எவ்வாறு பேச வேண்டும், பழக வேண்டும், விதிமுறைகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதனைக் குழந்தையானது கற்றுக் கொள்கின்றது.

3. வழக்கமான நிலைக்குப் பின்பு (Post Conventional Level)

வீடு, பள்ளி போன்ற இடங்களில் மட்டுமின்றி பொது இடங்களிலும் குழந்தைகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனைக் கற்றுக் கொள்கின்றனர். குழந்தையானது 5-6 வயதில் இவற்றைப் பற்றித் தெளிவுற புரிந்து கொள்கின்றனர்.

படிநிலை 5

பொது இடங்களில் அனைவரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான விதிமுறைகளைக் குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைக்கின்றனர். பள்ளியிலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இம்மதிப்புகளை அறிவுறுத்துகின்றனர். (உ-ம்) நூலகத்தில் பேசக் கூடாது, பூங்காவில் பூக்களைப் பறிக்கக் கூடாது.

படிநிலை 6

உலகம் முழுவதும் பின்பற்றப்படும் சார்பற்ற மதிப்புணர்வுகளான நேர்மை, ஒழுக்கம், வாய்மை, நேரந்தவறாமை முதலானவற்றின் முக்கியத்துவத்தைக் குழந்தையானது பள்ளியில் ஆரம்ப நிலை கல்வியிலிருந்து கற்றுக் கொள்கிறது. பின்பு இடைநிலை மேல்நிலைக் கல்வியின் மூலம் குடியுரிமை, மனித உரிமைகள், சமத்துவம், சமயத்துவம் முதலானவற்றைப் பற்றி அறிந்து கொள்கின்றன. பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள். குழந்தைகளின் மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி, உளவியலிலைக் கருத்தில் கொண்டு அவர்களின் வளர்ச்சி நிலைக்கேற்ப ஆக்கபூர்வமாக அவர்களை நெறிப்படுத்த வேண்டும். 

லாரன்ஸ் கோல்பெர்க் (Lawrence Kohlberg) நுண்ணறிவுடன் கூடிய நன்னெறி மேம்பாட்டிற்கான மாதிரி உருவினை உருவாக்கினார். இதன் மூலமாக ஆசிரியர் மாணவர்களின் முன்அனுபவங்கள் மற்றும் முன்னறிவாற்றலின் துணை கொண்டு மதிப்புணர்வு நெருக்கடிக்கான தீர்வினைக் காண பயிற்சி அளிக்கலாம். இம்மாதிரி உருவினைக் கொண்டு ஆசிரியர்மாணவர்களுக்கு மதிப்புணர்வு நெருக்கடியை தீர்ப்பதற்கான பயிற்சியினை அளிப்பார்.

1. முதலில் ஆசிரியர் மாணவர்களிடம் மதிப்புணர்வு நெருக்கடியுடன் கூடிய சூழல் ஒன்றினை அறிமுகப்படுத்துவார்.

2. மதிப்புணர்வு நெருக்கடியின் தன்மையினை மாணவர்கள் புரிந்து கொண்டனரா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்வார்.

3. மதிப்புணர்வு நெருக்கடியின் போது தனி நபர் மற்றும் சமூகமானது எவ்வாறு பாதிப்படைகின்றனர் என்பதனை விளக்கிக் கூறுவார்.

4. பின்பு மாணவர்கள் அச்சூழலுக்கான தீர்வினை நிதானத்துடன் சிந்துத்துக் கூறும்படி ஊக்குவிப்பார்.

5. மாணாவர்கள் அந்நெருக்கடிக்கான தீர்வுகளைக் கூறும் போது, அவற்றினைக் குறித்த கலந்துரையாடலை ஊக்குவிப்பார். அவற்றின் பின்விளைவுகளை உணரச் செய்து, அத்தீர்வுகளுள் பொருத்தமான ஒன்றினைத் தேர்வு செய்யும்படி கூறுவார். 

இம்முறையின்மூலம் மதிப்புணர்வு நெருக்கடியைத் தெளிவாக்குதல், மதிப்புணர்வு போராட்டங்களை ஆக்கபூர்வமாக சந்திக்கும் ஆற்றல் ஆகியன மாணவர்களிடையே வளர்கின்றன. 

நன்னெறி அல்லது அறத்தைக் கற்பித்தல் (Moral Indoctrination) 

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நன்னெறியை கற்பிக்கும் போது அவர்களின் சிந்திக்கும் ஆற்றலினை மனத்தில் கொள்வதில்லை. நன்னெறியினை இன்றைய இளம் சமுதாயத்தினராகிய  மாணாக்கர்களுக்குப் போதிக்கும் போது, அவற்றின் முக்கியத்துவம் மற்றும் அவற்றைப் பின்பற்றாவிட்டால் ஏற்படக் கூடிய பின் விளைவுகளை ஆசிரியர் கூற வேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்கு நன்னெறிகளைக் குறித்து நேர்மறையான மனப்பான்மை உருவாகும். மாணவர்கள் நன்னெறிகளைத் தம் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுவதற்கான வழி பிறக்கும்.

நன்னெறிக் கல்வியின் வடிவம் (Form of Moral Education)

நன்னெறிக் கல்வியானது கல்வி நிறுவனங்களில் பல்வேறு வடிவங்களில் அளிக்கப்படுகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:

1. கல்வி நிறுவனங்களில் காலை வழிபாட்டின் வழியே மாணாக்கர்களுக்கு ஒழுக்கம்,

நேரந்தவறாமை, இறைவழிபாடு, தேசிய உணர்வு, சமய நல்லிணக்கம் போன்றவை கற்றுத் தரப்படுகின்றன.

2. மாணாக்கர்களுக்கென தியான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் அவர்களின் மனம் ஒருநிலைப்படுகிறதுஇ கவனம் ஒழுங்குபடுத்தப்படுகிறது, நினைவாற்றல் பெருகிறது.

Post a Comment

0 Comments