கல்வியில் தத்துவ மற்றும் சமூக அடிப்படைகள் தொடர்பான வினா விடை | Social & Philosophical Foundations in Education

 


(1) கல்வி என்பது பரீட்சைகளில் தேர்ச்சி பெறுவது மட்டுமல்ல. மாறாக தனிமனிதனின் முழு வளர்ச்சிககும் கல்வியே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

i. மேற்கண்ட கருத்தின் அடிப்படையில் கல்விக்கான உங்கள் சொந்த வரைவிலக்கணம் ஒன்றை உருவாக்குங்கள்.

தனியாளுக்குத் தேவையான முறைசார் மற்றும் முறைசாறா அறிவைக் கொடுப்பதுடன் தனியாளின் உடல், உள, மனவெழுச்சி, சமூக இணக்கம், நடத்தை, ஆளுமை, விழுமியம் என்பவற்றை விருத்தி செய்யுமுகமாக அனுபவத்தை வழங்கி சமூகத்தோடு இயைபுபடுத்தும் செயற்பாடு கல்வியாகும்.

ii. கல்வி தொடர்பான கிழக்கு மற்றும் மேற்கத்திய தத்துவவாதிகள் முன்வைத்த கருத்துக்களின் இடிப்படையில் கல்வியின் நோக்கங்கள் எவ்வாறு மாறியுள்ளளன என்பதை விளக்குக.

கிழக்கு மற்றும் மேற்கத்திய தத்துவவாதிகள், அவர்கள் வாழ்ந்த கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தத்தமது கல்வித் தத்துவக் கருத்துக்களையும் அதனுடன் தொடர்பான கோட்பாடுகளை முன்வைத்தும் செயற்படுத்தியும் உள்ளனர். இவர்களில் கல்வி பற்றிக் கருத்துரைத்த, தற்காலத்தில் எல்லோராலும் வாதிடப்படும் கல்வித் தத்துவவாதிகளான பிளேட்டோ, அரிஸ்டோட்டில், ரூசோ, டூயி, அட்லர், கொன்பியுசியஸ், அல்-பராபி, ரவீந்திரநாத் தாகூர், காந்தி, கார்ல் மார்க்ஸ் எனப் பலரை இனங்காட்டலாம்.

இத்தகையவர்கள் கூறிய கருத்துக்களில் இருந்து பின்வரும் கல்வித் தத்துவ சிந்தனைகள் உறுவாகின. அவை பின்வருமாறு

  • இலட்சியவாதம்ஃ கருத்தியல்வாதம் (Idealism)
  • யதார்த்தவாதம்ஃ மெய்ம்மைவாதம் (Realism)
  • பயனளவைக் கொள்கைஃ நடைமுறைவாதம் (Pragmatism)
  • இருத்தலியல்வாதம் (Existentialism)
  • நிலைத்திருத்தல் வாதம் - Perennialism
  • இன்றியமையாவாதம் – Essentialism
  • முற்போக்குவாதம் – Progressivism
  •  மீள்கட்டுமானவாதம்/ சீரமைப்புக் கொள்கை ((Re-constructivism)

மேலே பட்டியல்படுத்துப்பட்ட கல்விச் சிந்தiகைள் ஊடாக பலவிதமான கல்வி நோக்கங்கள், கற்றல் செயற்பாடுகள், மற்றும் கலைத்திட்ட மாதிரிகளும் உருவாக்கம் பெற்றன. இவ்வாறு உருவாக்கப்பட்ட கல்வி நோக்கங்கள், கற்றல் செயற்பாடுகள், மற்றும் கலைத்திட்ட மாதிரிகள் என்பவற்றை மேற்கத்தைய தத்துவாதியான பிளேட்டோவின் இலட்சியவாத கல்விச் சிந்தனைகளை உதாரணம் காட்டி விளங்கிக் கொள்ள முடியுமாக இருக்கும்.

பண்டைய கிரேக்க நாடு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆளப்பட்ட சூழலில் பிளேட்டோ வாழ்ந்த எதன்ஸ் நகரை ஸ்ப்பானியர் கைப்பற்றியமையாலும், அவர்களது ஆட்சியில் “வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற விதத்தில் ஆபாசவாதிகள் நடந்த கொண்டதாலும் ஒழுக்க விழுமியங்கள் சீர்குழைந்தன. இவற்றை சீர்திருத்த பீளேட்டோ தான் சோக்கிரட்டீசிடமிருந்து பெற்றுக் கொண்ட அறிவை பயன்படுத்தி பின்வரும் இலட்சியவாதக் கல்வித் தத்துவ சிந்தகைகளை (நோக்கங்கள்) தான் வாழ்ந்த சமூகத்தில் வெளிக்கொணர்ந்தார்

  • கல்வியின் மூலம் பூரண ஒழுக்கம் நிறைந்த நபர்களை உருவாக்குதலும், அதனூடாக தேசப்பற்றுடைய இலட்சியவாத நபர்பளை உருவாக்குதலும்.
  • கல்வி வாழ்க்கை முழுவதும் நீடித்ததாக விளங்குதல் வேண்டும்
  • பொதுக்கல்வியானது ஆண், பெண் அனைவருக்கும் உரியதாகும்.
  • கல்வி தனியாள் அபிவிருத்தியை ஏற்படுத்துவதுடன் நாட்டில் அபிவிருத்தியையும் ஏற்படுத்த வேண்டும்.
  • கல்வி உண்மையின் மிது கட்யெழுப்பப்படுதல் வேண்டும்.
  • கல்வி மனிதனின் சமநிலையான ஆளுமையயை வளரச் செய்ய வேண்டும்.

மேற்படி நோக்கங்கனை அடையச் செய்ய பின்வரும் கல்வித்திட்டத்தை முன்மொழிந்தார்

  • முறைசார்சந்த கல்வி 6 வயதில் ஆரம்பித்தல்
  •  6 வயதிற்கு முன்னர் வீட்டுச் சூழலில் முன்பள்ளி கல்வியை பெறல்
  • 5 படிநிலைகள் கொண்ட கலைத்திட்டம்

  • பொதுக் கல்வி கட்டாயமானது, அரசே கல்வி வழங்கும் பொறுப்பினை ஏற்க வேண்டும்
  • தாய் மொழியில் கல்வி புகட்ட வேண்டும்
  • பொருத்தமான நுழைவுத்தேர்வொன்றினைக் கல்வி மட்டங்களிடையே நடத்துதல் வேண்டும்

மேற்கண்டவாறு பிளேட்டோ தான் வாழ்ந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு வடிவமைத்தார். இவ்வாறே ஏiயை தத்துவவாதிகளும் தங்களுது கல்வி நோக்கங்களையும் கல்வித்திட்டங்களையும் உருவாக்கினர்.

தற்கால நவீன உலகத்தில் வாழும் கல்வித் தத்துவவாதிகள் மற்றும் கல்வித்திட்டத்தில் நோக்கங்களை வடிவமைக்கும் கல்வியியலாளர்கள், ஏற்கனவே தத்துவவாதிகளினால் முன்மொழியப்பட்ட விடயங்களை ஆராய்ந்து தமக்குப் பொருத்தமான வகையில் கல்வியின் நோக்கங்களை தீர்மானிக்கின்றனர். இதன் விளைவாக கல்வின் நோக்கங்கள் முன்பை விட சற்று மாறியுள்ளது என்பதை விட முழுமையாக சீர்தூக்கிப் பார்க்கப்பட்டுள்ளது என்பது எதார்த்தமாகும். தற்காலத்தில் கல்வியின் நோக்கங்கை தீர்மானிக்கும் போது பின்வரும் விடயங்கள் கவனத்திற் கொள்ளப்படுகின்றன்.

  • ஏற்றுக் கொள்ளப்பட்ட தத்துவக் கருத்துக்களுக்கு அமைவாகக் கவ்வி ஒழுங்கு படுத்தப்பட வேண்டும்
  • நாடு ஏற்றுக் கொள்ளும் அரசியல், பொருளாதார, அற நெறிகளுக்கேற்பக் கல்வி நோக்கங்கள் அமைந்திருக்க வேண்டும்
  • மக்களின் பொருளாதார, சமூக, காலாச்சார முன்னேற்றத்துக்கு வழி வகுப்பதோடு-கல்வியில் தனி மனித வளர்ச்சிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்
  • சமுதாயத்தில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குகம்; கல்வி வழி வகுக்க வேண்டும்
  • சமுதாயத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு கல்வியின் நோக்கம் வரையறுக்கப்;படுகின்றது. இவ்வாறு வரையறுக்கப்படும் கல்வியின் நோக்கங்கள் பல குறிக்கோள்களைக் கொண்டுள்ளன. இந்நோக்கங்களும், குறிக்கொள்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்தும் வகையில் அமைதல் வேண்டும்
  • எதிர்காலத்தில் எழக் கூடிய தேவைகளையும் பிரச்சினைகளையும் கவனத்திற் கொண்டு கல்வி நோக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும்

பல தத்துவ அறிஞர்களும், கல்வியியலாளர்களும், பல காலங்களில், பல நாடுகளில் மாறும் சூழலுக்கேற்ப கல்வி நோக்கங்களை உருவாக்கியுள்ளனர். தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப கல்வி நோக்கங்களும் அவற்றை அடையும் முறைகளும் மாறுபடுகின்றன. இயற்கையான இம்மாற்றம் நிகழவில்லையெனில் கல்விச் செயல்கள் தேங்கும். நவீன கல்வியாளர்களின் கருத்துப்படி எல்லாக் கல்வி நோக்கங்களும் அத்யாவசியமானவையே. ஆனால் ஒன்றிணைந்த ஒரு நோக்கத்தைக் கல்வியின் நோக்கமாகத் தீர்மானிக்க இயலாது. எந்த ஒரு தனி நோக்கமும் கல்வி வளர்ச்சிக்கான விரும்பத்தக்க எல்லாப் பலன்களையும் தனித்து அளிக்க இயலாது. அவைகள் தனி மனிதனின் ஆளுமை வளர்ச்சியின் ஒரு பகுதி அல்லது சில பகுதிகளை மட்டுமே வளர்க்கும். முழுமையான ஆளுமைத் தன்மையை வளர்க்க எல்லா நோக்கங்களையும் உட்படுத்திய கல்வி முறை தேவை.

(2) குடும்பத்தையும் சமூகத்தையும் இணைக்கும் பாலமாக பாடசாலையை விவரிக்கலாம் அதனால்தான் சமூகமயமாக்களில் கல்வி முக்கிய பங்கு வகினக்கிறது

i. சமூகமயமாக்கல் என்றால் என்ன என்பதை சுருக்கமாக விளக்குங்கள்.

சமூகமயமாக்கல் என்பது ஒருவர், தனது சமூகத்திலுள்ள நிலைமைகளுக்கு ஏற்ப பொருத்தப்பாடு அடைவதைச் சமூகமயமாக்கல் என்று வரையறை செய்யலாம்.

மேலும் சமூகமயமாக்கல் என்பது ஒரு தொடர்ச்சியான கருமத்தொடராகும். இதன் மூலம் ஒருவர் தனிப்பட்ட அடையாளத்தைப் பெற்றுக்கொள்வதுடன் தம்மைச் சூழவுள்ள கலாசாரத்தின் நம்பிக்கைகளையும் அச்சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் கற்றுக் கொள்கின்றான். ஒரு நபர் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு செய்ய வேண்டியவைகள், செய்யக் கூடாதவைகள் அறிய வேண்டியவைகள் எவை என்பன பற்றி கற்றுக்கொள்ளும் செயற்பாடாகவும் உள்ளது. ஒரு சந்ததியிலிருந்து இன்னொரு சந்ததிக்கு கலாசாரங்கள் இடமாற்றப்படுவது சமூகமயமாக்கல் மூலமாகவே ஆகும். ஆகவே ஒரு மனிதன் சமூகத்தில் வாழ்வதற்கு சமூகமயமாக்கப்படுவது அவசியமாகும்.

ii. சமூகமயமாக்களில் பாடசாலையின் செயற்பாடுகளை உதாரணங்களுடன் விளக்கவும்

பிள்ளைப் பருவத்திலிருந்தே சமூகமயமாக்கல் ஒருவரிடத்தே ஏற்படுத்தப்பட வேண்டும். இச் சமூகமயமாக்கல் முகவர்களாக குடும்பம், பாடசாலை, பல்கலைக்கழகங்கள், சமூக கலாசார நிறுவனங்கள் என்பன தொழிற்பட வேண்டியது அவசியமாகின்றது. அந்த வகையில் குடும்பத்திற்கு அடுத்ததாக பாடசாலையே சமூகமயமாக்கல் நிறுவனமாகத் தொழிற்படுகின்றது. குடும்பத்திலிருந்து நேரடியாக பாடசாலைக்குச் செல்லும் பிள்ளையை சமூகமயமாக்கல் செயற்பாட்டில் ஈடுபடுத்தும் செயற்பாடுகளாக பாடசாலையில் பின்வரும் செயற்பாடுகள் இடம்பெறுபடுகின்றன.

போட்டி நிகழ்ச்சிகள் : இல்ல விளையாட்டுப் போட்டியை எடுத்துக் கொண்டால் “விளையாட்டுப் பிள்ளையிடம் நற்பண்புகளை வளர்ப்பதுடன், விட்டுக்கொடுப்பு, வெற்றி தோல்விகளை சமமாக ஏற்றுக் கொள்ளல், தலைமைக்கு கட்டுப்படும் பண்பு விதிகளைக் கடைபிடித்தல், சட்டதிட்டங்களை மீறாமை, உடலைக் கட்டாகப் பேணுதல், வெற்றிக்காகப் போராடும் முயற்சியை வளர்த்தல் போன்ற சமூகமயமாக்கல் பண்புகள் வளர்க்கப்படுகின்றன. இதனால் எதிர்காலத்தில் வாழ்க்கையில் வரும் தோல்விகளை தாங்கிக் கொள்வதற்கும், தற்கொலை போன்ற விடயங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும் மேலும் குற்றச் செயல்களான கொலை, மதுப்பாவனை போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பதற்கும் விளையாட்டுச் செயற்பாடுகள் உதவுகின்றன. மேலும் கோட்ட, வலய, மாகாண, தேசிய ரீதியில் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடும் போது “கிணற்றுத் தவளையாக இல்லாமல்” சமூக விழிப்பு ஏற்பட்டு சமூகமயமாக்கல் தோற்றம் பெறுகின்றது அத்துடன் பிறரின் திறமைகளுடன் ஒப்பிடும்; போது “தான் எந்த நிலையில் உள்ளேன் என்பதையும்” இன்னும் எவற்றை வளர்க்க வேண்டும் என்றும் அறிவதுடன் மத, இன, சாதி, பேதங்களை மதிக்கும் தன்மையும், நட்புறவுடன் செயற்படும் ஆற்றலும் வளர்த்தெடுக்கப்படுகின்றது.

கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் : பாடசாலை கற்றல் கற்பித்தலில் செயற்படுத்தப்படும் ஒப்படை, ஆக்கச் செயற்பாடுகள் மற்றும் குழச் செயற்பாடுகள் மூலம் கூட்டாக பிறருடன் ஒத்துளைத்துச் செயற்படும் தன்மை வளர்க்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் சமூகத்திற்குள் செல்லும் பிள்ளை பிறருடன் எவ்வாறு இணைந்து செயற்பாடுகளை செய்ய வேண்டும். சமூகத்தடன் ஒத்துழைத்தச் செயற்படுவது எப்படி எனவும் கற்றுக் கொள்கின்றது.

வெளிக்களச் செயற்பாடுகள் : சுற்றுலா, களப்பயணங்களில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்தும் பொது பல்வேறு சமூக கலாச்சாரங்களை உணரவும், சூழலுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைவது எப்படி என அறிந்து கொள்ளவும் முடிகிறது. மேலும் குழுச் செயற்பாடுகள், முன்வைப்புக்கள் (Pசநளநவெயவழைளெ) போன்றவை மூலம் உளவிருத்தி, தன்னம்பிக்கை தலைமைதாங்கும் பண்பு என்பன வளர்க்கப்பட்டு பின்காலத்தில் சமூகத்தில் செல்லும் பிள்ளைக்கு அவை சமூகத்தில் முன்மாதிரியாக வாழ, சமூகமயமாக்கலுக்கு வித்திடுகின்றது. மேலும் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் பயந்து பிறருடன் பேசாமல் ஒதுங்கி இருக்கும் பிள்ளை துணிந்து பிறருடன் சகஜமாக பேச முற்படுகின்றது

தலைமைத்துவ செயற்பாடுகள் : பாடாசலைக் கட்டமைப்பில் மணவர்கள் என்ற ரீதியில் பல வகையான பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் காணப்படுகின்றது. அவற்றை முறையாக வழிநடாத்த மாணர்களுக்கு பதிவிகள் வழங்கப்படுன்றது. அதாவது வகுப்புத்தலைவர், மாணவத்தலைவர், குழுக்களின் தலைவர் போணற்வற்றைக் குறிப்பிடலாம். இதன் மூலம் தலைமைத்துவப்பண்பு வளர்க்கப்படுவதுடன் வாழ்வில் ஒரு செயலை பொறுப்பெடுத்து சரியாகத் திட்டமிட்டு நடாத்துதல், அதன் போது வரும் முரண்பாடுகளைத் தீர்த்தல், எந்த விடயத்தையும் துணிந்து செய்ய முற்படல், பிறரை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருத்தல், சமூக சேவைகளில் ஈடுபடல் போன்ற சமூகமயமாக்கல் பண்புகள் வளர்க்கப்படுகின்றன.

மேற்படி விடயங்களை பார்க்கும்போது சமூகமயமாக்கலில் பாடசாலை என்ற அலகு அதிகமான பங்களிப்பை வழங்குகிறது. மாணவனை சமூகமயமாக்கலுக்கு உட்படுத்துவது மட்டுமன்றி பிள்ளைக்கு நல்லது எது தீயது எது என பகுத்துத் தெரிந்து கொள்ளும் “அறிவு” வளர்க்கப்படும். இவ்வாறே நேரடியாகவும் மறைமுகமாவும் பாடசாலைச் செயற்பாடுகள் சமூகமயமாக்கலை ஏற்படுத்துகின்றது. எனவே பாடசாலையில் ஆசிரியர்களும் அதிபரும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் ஏனைய புறக்கீர்திய செயற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் பிள்ளைகளிடத்தில் சமூகமயமாக்கலை ஏற்படுத்தி சமூகத்தில், நாட்டில் நற்பிரஜைகளை உருவாக்கும் தேசிய இலக்கை அடைய முடியும்.

iii. மாணவர்களின் சமூகமயமாக்கல் செயன்முறை தொடர்பாக பாடசாலைகள் பல சவால்களை எதிர்கொள்கின்றன. உங்கள் பாடசாலையிலிருந்து ஐந்து ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து, உங்கள் பாடசாலை எதிர்கொள்ளும் சமூகமயமாக்கல் தொடர்பான பிரச்சினை/சவால்களைப் பற்றி கலந்துரையாடுக. பின்னர், உங்கள் பாடசாலை எதிர்கொள்ளும் சமூகமயமாக்கலின் குறைந்தபட்சம் மூன்று பிரச்சினைகள்/சவால்களை பட்டியலிட்டு, அந்த பிரச்சினைகள்/சவால்களை சமாளிக்க பொருத்தமான தீர்வுகளை பரிந்துறைக்கவும்.

பாடசாலையானது சமூகமயமாக்கலில் முக்கிய வகிபாத்தை தன்னகத்தே கொண்ட சமூக அலகாகும். பாடசாலைக்கு வருகின்ற மாணவர்கள் பலதரப்பட்ட குடும்ப மற்றும் சமூக பின்னணிகளைக் கொண்ட தன்மை காணப்படும். இதன் காரணமாக பாடசாலைச் சூழலில் பல்வேறுபட்ட மாணவர்களை சமூகமயமாக்கல் செயன்முறையின் போது ஏற்படும் பிரச்சிiகைள் தொடர்பாக சக ஆசிரியர்களுடான கலந்துறையாடல் மூலம் பல பிரச்சினைகள் பட்டியல்படுத்தப்பட்டது. அதிலிருந்து தெரிவு செய்யப்பட்ட முக்கிய மூன்று பிரச்சினைகள் பின்வருமாறு.

1. பாடசாலைக்கும் வெளிச் சமூத்திற்குமான ஒத்துழைப்பு மிகக் குறைவு

2. ஆசிரியர்களுக்கு சமூகமயமாக்கல் செயன்முறை தொடர்பான போதியளவு தெளிவின்மை.

3. சமூகமயமாக்கல் செயன்முறைக்கு முக்கியத்துவம் வழங்காத பாடசாலை நிர்வாகம்

மேற்படி பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு பின்வரும் தீர்வுத்திட்டங்களை பரிந்துரைக்கின்றேன்

  • பாடசாலைக்கும் வெளிச் சமூகத்திற்குமான ஒத்துழைப்பை வகுப்பாசிரியர் தமது வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுடன் நல்ல உறவை பேணுவதினூடாக கட்டியெழுப்ப முடியும். இது படிப்படியாக வளர்ச்சி காணும் போது வெளிச்சமூகத்தில் காணப்படும் மதத் தளங்கள், பிரதேச செயலகம், பிரதேச சபை, கிராம சபை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பாடசாலையுடன் நெருங்கி செயற்பட ஆரம்பிக்கும். இதன் போது பாடசாலை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு (SDEC) பூரண ஒத்துழைப்பபை வழங்கும் போது மாணவர்களின் சமூகமயமாக்கல் செயன்முறையை இலகுபடுத்துவதுடன் மேம்பாடடையச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
  • இரண்டாவது பிரச்சினையாக ஆசிரியர்களுக்கு சமூகமயமாக்கல் செயன்முறை தொடர்பான போதியளவு தெளிவின்மை, இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆசிரியர்களுக்கு செயலமர்வுகளை நாடாத்துதல். இதற்காக பாடசாலை மட்டத்தில் காணப்படும், பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி நிகழ்ச்சிகளுக்கு (SBTDP) ஒதுக்கப்படும் நிதிகளைக் கொண்டு செயலமர்வுகளை நடாத்துதல் மற்றும் கண்கானித்தல் போன்ற செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல் வேண்டும்.
  • பாடசாலை நிர்வாகமானது கல்வி நடவடிக்கைகளில் மாத்திரம் அதிக முக்கியத்துவம் வழங்குகின்றது. மேலும் சமூகமயமாக்கல் செயன்முறைக்குறிய ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகள், பாடசாலை மட்டத்திலான கழகங்கள் மற்றும் குழுக்கள் இயங்குநிலை இன்றி பெயரளவில் மாத்திரம் காணப்படுகின்றன. இவற்றை ஒழுங்குமுறையில் இயக்குவது தொடர்பில் ஆசிரியர் குழுக்கூட்டம், பாடசாலை முகாமைத்து குழுக்கூட்டம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தில் கலந்துறையாடி, அவற்றை நடைமுறைப்படுத்துவன் மூலம் சமூகமயமாக்கல் செயன்முறையை பாடசாலை மட்டத்தில் வலுப்படுத்த முடியுமாக இருக்கும்.

MNSM. Yoosuf  B.Sc. in MIT (SEUSL), PGDE (MERIT) NIE, M.Ed. (R) OUSL

BT/BC/KAWATHAMUNAI AL AMEEN MAHA VID. 

உசாத்துணைகள்

1. சுமதி மகேந்திரராசா. (2012). சமூகமயமாக்கல் - குடும்பம் மற்றும் பாடசாலையின் பங்கு. சஜ்ஜூ பதிப்பகம்.

2. கருணலிங்கம், வீ. ரூ திருநாவுக்கரசு, செ. (2015). கல்வியின் அடிப்படைகள்.

3. முத்துலிங்கம், ச. (1983). கல்வியியல். ஆசிர்வாதம் அச்சகம்.

4. செல்வராஜா, மா. (2005). கல்வியியல் அடிப்படை எண்ணக்கருக்கள். எவகிரீன் பிரின்டஸ்.

5. ஜெயராசா, சபா. (2008). கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தiகைளும். சேமமடு பதிப்பகம.;

Post a Comment

0 Comments