விழுமியங்களின் வளர்ச்சி (Values of Development)

 

விழுமியங்களின் வளர்ச்சி  (Values of Development)

வளர்ச்சிகளை நான்கு விதமாகக் கொள்ளலாம்.

1. உடல் வளர்ச்சி (Physical Development)

2. அறிவு வளர்ச்சி (Knowledge Development)

3. மனவெழுச்சி வளர்ச்சி (Emotional Development)

4. சமூக வளர்ச்சி (Social Development)

1. உடல் வளர்ச்சி (Physical Development)

உயரமும் எடையும் அதிகரிக்கும் பருவம் இது. நாளமில்லா சுரப்பிகள் வளர்ச்சியடைந்து துரிதமாக வேலை செயயத் தொடங்குகின்றன. பாலுணர்ச்சி தோன்றும் (Sex Consciousnes) பருவம். முகத்தில் தோன்றும். பருக்கலால் கூச்சம் உண்டாகலாம். வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கலாம். வெற்றி தோல்வி அடைவதினால் ஒருவித மனப்பக்குவம் உண்டாகும். சத்துள்ள உணவுஇ போதுமான ஒய்வுஇ உறக்கம் இன்றியமையாதது. பாலினக் கல்வி (Sex Education) அவசியம். பாலுணர்ச்சி ஒரு இயற்கைத் தூண்டலினால் தோன்றும் மன எழுச்சிகளும் இயற்கையானவையே என எடுத்துரைக்க வேண்டும்.

இதனை போதிக்கும் ஆசிரியர் மன முதிர்ச்சி பெற்றவராக இருத்தல் நல்லது. பெற்றோரே இதனை அளிக்கலாம். இப்பாலூக்கத்தைத் தூய்மைப்படுத்தி (Sublimation) பயனளிக்கக் கூடிய பல வழிகளில் மடை மாற்றவும் (Canalization) வேண்டும். உடல் திறனில் (Body building exercise)  உடற்பயிற்சியில் மாணவர் அக்கறை காட்டுவர். உடல் வளர்ச்சி மாறுதல்கள் ஆண்களைவிட பெண்களுக்கு ஓரிரு வருடங்கள் முன்பாகவே தோன்றுவதுண்டு. ஆண் பெண் மாணவர் பழகுவதை ஒருவித சந்தேக நோக்குடன் பார்ப்பது தவறென தற்கால கல்வியாளர்கள் அபிப்ராயப்படுகின்றனர். ஆண் பெண் இருபாலரும் சேர்ந்து கல்வி பயிலும் பள்ளிகளில் மாணவரிடையே கருத்து பரிமாறல்இ பட்டிமன்றம் பொருட்காட்சி (Exhibition), உல்லாசப் பயணம்(Excursion), விளையாட்டுக்கள் (Games) முதலியவை ஆசிரியர் மேற்பார்வையில் நடத்துவதில் தப்பில்லை. அவர்களைப் பிரித்து தனித்திருக்கும்படி வற்புறுத்தி சாதாரண பேச்சுக்களையும் தவறாகப் பாவித்தல். தணடித்தல் போன்றவை மன நல இயலுக்கு (Mental Hygiene) ஏற்றதல்ல.

2. அறிவு வளர்ச்சி (Knowledge Development)

இப்பருவத்தில் அறிவுப் பெருக்கம் காணப்படும் (Expansion of Mental Capacity) நுண்ணறிவு வளர்ச்சி முழுமையடைகிறது. பியாஜ குறிப்பிட்ட முறையான செயல்முறை (Formal Operational Stage) இப்பருவத்தில் தோன்றுகிறது. ஆய்ந்தறியும் தன்மை மேலோங்கும். கருதுகோள் அமைத்தல் காணப்படும். சோதனை மூலம் அறிவு பெறும் பண்பு மிளிரும். படிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைப் பருவத்தில் கவர்ந்த கதைகளும் நாவல்களும் குமரப்பருவத்தில் கவர்வதில்லை. காதல் துப்பரிதல் போன்ற நாவல்களில் ஆர்வம் அதிகரிக்கும். சொற்களஞ்சியம் அதிகரிக்கும். எவற்றையும் சீர்தூக்கி பகுத்தறிவால் ஆராய்ந்து முடிவு செய்யும் தன்மை தோன்றும்.

பெரியோரிடம் வாதாடும் தன்மை (Argument) வெளிப்படும் அறநெறி ஒழுக்க வளர்ச்சியில் முன்னேற்றம் காணப்படும். பண்டைய மதிப்புகளும் (Antiquity Value) மூட நம்பிக்கைகளும் (Superstitions) உடைத்தெறியப்படும் சிலரிடம் நாத்திக மனப்பான்மையும் (Disbelief in Religion) தோன்றலாம். அரசியலைப் பற்றி அலசும் தன்மை மேலோங்கும். நாட்டங்கள் (Apptitude) வெளிப்படும். தொழில்சார்கல்வி (Vocaltional Education) இப்பருவத்தினருக்கே மிகவும் பொருந்தும். வாழ்க்கைத் தொழில் தேர்வுக்கு வழிகாட்டலும் (Vocaltional Guidance) இப்பருவத்தினருக்குத் தேவைப்படுவதாகும்.

3. மனவெழுச்சி வளர்ச்சி (Emotional Development)

குமரப்பருவ நிலையிலிருந்து ஒருவர் முழு முதிர்ச்சி நிலைக்கு மாற்றம் பெறும் பருவமாகும். இதனை ஒரு தெளிவற்ற நிலைக்கு ஒப்பிடலாம். ஒரு பொழுது தளர்நோக்குடன் காணப்படும் குமரப்பருவத்தினனைஇ உடனடியாகத் தளரா நோக்கோடு செயல்படுவதையும் நாம் காணலாம். ஆவர்களுடைய உடலும் மனமும் மனவெழுச்சியற்ற அமைதியான நிலையிலேயே சமநிலை சிதைந்து காணப்படுகின்றன. இதற்குக் காரணம் இப்பருவத்தினரது வளர்ச்சியில் நிகழும் வேகமான மாறுதல்களே தீவிர மனவெழுச்சிக்குட்பட்டால்இ அவர்களின் நிலை முற்றிலும்இ ஒழுங்கு குலைந்து சிதைந்து போவதில் வியப்பொன்றும் இல்லை. தன்மான உணர்ச்சி மிகுந்த இப்பருவத்தில் பிறர் தம்மை மதிக்க வேண்டும் என்னும் எண்ணமும் பிறர் தம்மைப் பார்த்து ஏளனஞ் செய்வார்களோ என்னும் அச்சமும் மிகுந்து காணப்படும். இப்பருவத்தினர் பெரியோர்களின் கட்டுப்பாட்டை அதிகம் விரும்புவதில்லை. ஆனாலும் கட்டுப்பாடுகள் சமூகச் சூழ்நிலையில் வீட்டிலும் பள்ளியிலும் இருந்தே தீருகின்றன. குமரப்பருவத்தினர் இவற்றாலும் மனவெழுச்சிகளுக்குட்படுகிறார்கள். பால் உணர்ச்சியுடன் தொடர்பு கொண்ட மன எழுச்சிகளும் பொதுவாக இப்பருவத்தில் தோன்றும். குமரப் பருவத்தினரிடம் முதிப்பருவ நடத்தைகளைச் சமுதாயத்தினர் எதிர்பார்ப்பர். இவ்வெதிர்பாட்டினின்று விடுபடுதலில் விருப்பம் மிகுந்துஇ இதனின்றும் பிரச்சனைகள் எழக்கூடும்.

தனது உண்மை நிலை பற்றியும்இ தன்கருத்துஇ தனது எதிர்கால அவாக்கள்இ தன்னம்பிக்கை போன்றவற்றுடன் தொடர்புடைய பிரச்சனைகளும் எழும் கல்வி, பொருளாதாரம் சமூக மதிப்பு போன்றவற்றுடன் இணைத்தும் பல பிரச்சனைகள் இப்பருவத்தில் எழக்கூடும். மன எழுச்சிகள் தீவிரம் அடைந்து மனப்போராட்டங்களாக மாறாமல் கவனித்துக் கொள்வது. பெற்றோர்கள்இ ஆசிரியர்கள் ஆகிய இவ்விரு சாராரின் கடமையாகும். வீட்டில் பெற்றோர்கள் இப்பருவத்தினர் மனம் புண்படும்படியாகவோ அல்லது தீவிர மன எழுச்சிகளைத் தூண்டும் படியாகவோ நடந்து கொள்ளக் கூடாது.

இப்பருவத்தினரை அளவுக்கு மீறிக் கட்டுப்படுத்த நினைப்பது பயனற்றது மட்டுமல்லாமல் தீமை பயப்பதும் ஆகும். அன்பும்இ பரிவும் இவர்கள் பால் பெற்றோர்கள் காட்டிஇ இவர்களுடைய சுதந்திர உணர்ச்சியை மதித்துஇ வீட்டில் பொறுப்புள்ள செயல்களைச் செய்ய வாய்ப்புகளையும் அளிப்பார்கள் ஆயின் மனவெழுச்சித் தீவிரமும்இ பொருத்தப்பாடின்மை போன்றனவும் தவிர்க்கப்படும். பள்ளிகளில் ஆசிரியர்கள்இ அறிந்தோ அறியாமலோ பல நேரங்களில் குமரப் பருவத்தில் உள்ள மாணவர்களிடையே மன அமைதிக்குலைவைத் தோற்றுவிக்கிறார்கள். அவர்கள் மனம் புண்படும்படி பேசுதல்இ அவர்களின் திறமைக்கு அப்பாற்பட்ட வேலைகளைச் செய்யும்படி கட்டாயப்படுத்துதல்இ பாரபட்சமாக அவர்களை நடத்துதல் போன்ற செயல்களை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும். மனவெழுச்சிகளை ஒடுக்கி நசுக்க முற்படாமல்இ பயனுள்ள வழிகளில் அவை வெளிப்படப் பள்ளி வாழ்க்கையில் உல்லாசப் பயணங்கள் போன்றன இதற்கு பெரிதும் பயன்படும். முக்கியமான வேதனை என்னவெனில்இ களிமண் தன்மையுள்ள இவர்களை தீவிரவாதத் தலைவர்கள் தங்கள் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்கின்றனர். எனவே குமரப்பருவத்தினர் தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்ளாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

4. சமூக வளர்ச்சி (Social Development)

குமரப்பருவத்தில் ஒருவன் சிறப்பாக சமூக வளர்ச்சி பெறுகிறான். சமூக முதிர்ச்சியையும் பெறுகிறான். சமூக முதிர்ச்சியையும் பொருத்தப்பாட்டையும் அடைகிறான். இவற்றில் சிலவற்றைப் பாக்கலாம்.

1. பல நண்பர்களைப் பெற்றிருத்தல்.

2. பிறருடன் ஒத்துழைத்தல்

3.தனது செயல்களில் இருந்து எழும் விளைவுகளுக்கான பொறுப்புகளைத் தானே ஏற்பது.

4. சமூகப் பிரச்சனைகளைத் தன்னலநோக்குடன் அணுகாமல் பிறரது கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுதல்.

5. தனது நிறை குறைகளை உணர்ந்துஇ தன்னைப் பற்றிய உண்மையான மதிப்பீட்டைப் பெற்றிருத்தல்.

6. சமூகத்தோடு ஒன்றி சமூக நலனை வளர்ப்பதில் கவனம் செலுத்துதல்.

7. தற்காலிகமாக எழும் தடைகளைக் கண்டு உற்சாகம் குன்றிப் போகாமல் எழுச்சியுடன் அதற்கான வழிமுறைகளைக் கையாளுதல்.

மதிப்புணர்வுகள் மூலம் ஒரு மனிதன் சமூகத்திறன்களைப் (Social Skills) பெறுகிறான். பிறருடன் பழகுதல்இ பல்வேறு இடங்களுக்குச் சென்று பல்வேறு தரப்பட்ட மக்களுடன் பழகுதல், பிறருடன் இணங்கிச் செல்லுதல், பிறருக்கு ஒத்துழைத்தல்இ குழுவாகச் செயல்படுதல், பிறரை புரிந்துகொள்ளுதல்இ சமுதாயத்தில் உறுப்பினராதல் மற்றும் தலைவராதல் இத்தகைய பண்புகள் மூலம் ஒருவன் சமூக வளர்ச்சி பெறுகிறான்.

Post a Comment

0 Comments