ஆயுட்கால விருத்தி எண்ணக்கரு விளக்கம் | எரிக் எரிக்சனால் அறிமுகப்படுத்தப்பட்ட “ஆயுட்கால விருத்திக் கொள்கையின்” கோட்பாடுகளுடன் நீங்கள் எவ்வளவு தூரம் உடன்படுகின்றீர்கள்


 i. “ஆயுட்கால விருத்தி” என்னும் எண்ணக்கருவை விளக்குக.

ஆயுட்கால விருத்தி எண்ணக்கருவானது மனிதன் தாயின் கருவறையிலிருந்து இறப்பு வரையான வளர்ச்சியின் முழுயான செயன்முறையாகும். மேலும் இவ் எண்ணக்கருவானது உடலியல், அறிகை, சமூக மனவெழுச்சி போன்ற விருத்தி மாற்றங்கள் அனைத்தையும் புரிந்துகொள்வதற்கான முழுமையான விடயமாகும்.

மேற்சொன்ன மூன்று விடயங்களும் ஒரு மனித வாழ்வின் விருத்தியில் எவ்வாறு கருவறையிலிருந்து இறப்புவரை தொடர்புபடுகின்றது என்பதனை விளங்கிக்கொள்வதினூடாக “ஆயுட்கால விருத்தி” எண்ணக்கரு தொடர்பில் முழுமையான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

  • உடலியல் வளர்ச்சி - உயரம,; எடை, எலும்பின் தன்மை, பார்த்;தல், கேட்டல் போன்ற புலன் உறுப்புக்களின் வளர்ச்சியினை குறிப்பதாகும்.
  • அறிகை வளர்ச்சி - குழந்தை வளர்ச்சி நிலையில் காரணகாரியம் அறிதல், பிரச்சினைக்கு தீர்வு காணுதல், மொழி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, மற்றும் உடலில் ஏற்படும் மற்றங்கள் ஆகியனவாகும்.
  • சமூக மனவெழுச்சி வளர்ச்சி - சமூகம், மனவெழுச்சி ஆகிய இவை இரண்டும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையதாகும். சமூக மனவெழுச்சி வளர்ச்சி என்பது பிறருடன் நட்புறவுடன் பழுகுவதையும் இணக்கமுடன் செயல்படும் தன்மையுமாகும்.

மேற் குறிப்பிட்ட மூன்று விடயங்களும் ஆயுட்கால விருத்தி எண்ணக்கருவினது தூண்கள் என கூற முடியும். இதற்கு காரணம், மனித விருத்தியின் எல்லா முதிர்ச்சிக் கால கட்டங்களிலும் தாக்கம் செலுத்துவதாக இருக்கும்.

ii. எரிக் எரிக்சனால் அறிமுகப்படுத்தப்பட்ட “ஆயுட்கால விருத்திக் கொள்கையின்” கோட்பாடுகளுடன் நீங்கள் எவ்வளவு தூரம் உடன்படுகின்றீர்கள். ஒவ்வொறு விருத்திப்படிநிலைக்கும் ஒரு உதாரணத்தைக் குறிப்பிட்டு உங்களது விடையை நியாயப்படுத்துக.

உளவியலாளரான பிரொய்டை (Freud’s) பின்பற்றிய பல உளவியலாளர்கள் அவருடைய கருத்துக்களில் பயனுள்ளவற்றை எடுத்து, அவருடைய தொலைநோக்கை (vision) மேம்பாடு அடையச் செய்தனர். இவர்களில் மிக முக்கியமானவராகிய எரிக் எரிக்சன் Erik Erikson, 1902 - 1994) குழந்தைகளின் ஒவ்வொறு நிலைகளிலும் விருத்தி பற்றிய கருத்தை விரிவாக்கினார். எரிக்சன், தன்முனைப்பு, மற்ற தூண்டுதல்களுக்குமேல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதுடன் குழந்தையை திறன்கள், நோக்கங்கள் பெற்று, சமூகத்தில் செயல்பட்டு, பயன் அளிக்கக் கூடியவராக செய்கிறது என்பதை வலியுறுத்துகிறார். ஒரு அடிப்படை உளவியல் - சமூகபோராட்டம் (Basic psycho - Social Conflict), தொடர்ந்து எதிரானதிலிருந்து நேரானதாக மாற்றி தீர்க்கப்படுவது ஒவ்வொறு நிலையிலும் பயனுள்ள அல்லது பொருத்தமற்ற விளைவுகளை தீர்மானிக்கிறது.

கீழே காட்டியுள்ள படத்தின்படி எரிக்சன் முதல் ஐந்து நிலைகள் பிரொய்டின் நிலைகளுக்கு ஒப்பாக உள்ளன. ஆனால் எரிக்சனின் மூன்று இதர நிலைகளான. முன்முதிர் பருவம் (Young adulthood), நடுமுதிர் பருவம் (Middle adulthood), பின்முதிர் பருவம் (Old Age) ஆகியவற்றை சேர்த்துள்ளார். வாழ்க்கை முழுவதும் நடைபெறும் வளர்ச்சியின் தன்மையை புரிந்து கொண்டவர்களில் இவர் முதன்மையானவர்.

எரிக் எசிக்சனின் உள-சமூக வளரிச்சியின் எட்டு நிலைகள்


மேலே படத்தில் காட்டப்பட்ட எட்டு நிலைகளுக்குமான உதாணங்களுடன் நியாயப்படுதல்களை கீழ்வருமாறு அட்டவனையில் பார்ப்போம்.

மேற்சொன்ன விடயங்கள் அனைத்தையும் தற்கால உலகில் ஏற்பட்டுள்ள அபார மனித வளர்ச்சி அபிவிருத்தியை ஒப்பீட்டுரீதியாக பார்க்கும் பேர்து இக்கோட்பாடானது எல்லா நிலைகளிலும் நடைமுறையில் எற்றுக் கொள்ளக்கக்கூடிய ஒன்றாகவும், சில நிலைகளில் வெளிப்படுத்தபடுகின்ற உள-சமூக வெளிப்பாடுகள் மற்றும் நடத்தை மாற்றங்கள் எல்லா நிலைகளிலும் பிரதிபலிக்கக்ககூடிதாகவும் காணப்படுகின்றன என்ற முடிவுக்கு வரலாம்.

MNSM. Yoosuf  B.Sc. in MIT (SEUSL), PGDE (MERIT) NIE, M.Ed. (R) OUSL

BT/BC/KAWATHAMUNAI AL AMEEN MAHA VID. 



Post a Comment

0 Comments