கல்வி உளவியல் அடிப்படைகள் | மொழிவிருத்திசார் பிரச்சினை தொடர்பான வினா விடை


யாதாயினும் ஒருவகை மொழிவிருத்திசார் பிரச்சினையுடைய பிள்ளை ஒன்றினை தெரிவுசெய்து அப்பிள்ளை குறித்த பிரச்சினையை எதிர்நோக்குவதை எவ்வாறு உறுதி செய்தீர்கள் என்பதை விளக்குக.

மொழிவிருத்திசார் பிரச்சினையானது பிள்ளைகளின் மத்தியில் வயதுக்கு ஏற்றவாறு கிரகித்தல், வாசித்தல், பேச்சு மற்றும் எழுத்தாற்றல் போன்ற இன்னும் பல வகையான வடிவங்களில் காணப்படுகின்றன. மொழிவிருத்தியானது கற்றல் செயற்பாட்டிற்கு மாத்திரமன்றி எமது உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர முக்கியமான ஊடகமாகும். “எண்ணக்கருக்களைப் பெறவும், கொள்கைகளில் நின்றும் முடிவுகளை உயித்தறியவும் விதிகளை நன்கு அறியவும் மொழி ஒரு பிள்ளைக்குப் பெருமளவில் பயன்படுகின்றது” என்று ர~;ய மொழியியல் அறிஞர் லூரியா கூறுகிறார். மொழிவிருத்திசார் பிரச்சினைக்கு, ஒரு பிள்ளை பிறந்திலிந்து, தன்னுடன் அதிகமாக தொடர்பு கொள்ளும் பெற்றோர், உறவினர்கள், மற்றும் சமூகம் என்பன அதிகம் மொழிவிருத்தியில் தாக்கம் வெலுத்துவதாக அமையும். மேலும் பாலர் பாடசாலையும் மற்றும் பாடசாலையும் அடுத்த படியாக தாக்கம் செலுத்துவதாக இருக்கும்.

ஆசிரியர் என்ற ரீதியில் மாணவர்களுடன் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற சந்தர்ப்பங்களில் மொழிசார்விருத்தி பிரச்சினையுடைய பிள்ளைகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். இங்கு மொழிவிருத்திசார் பிர்ச்சினையாக ஒரு பிள்ளை தாய் மொழியான தமிழ் எழுத்துக்களை அடையாளம் கண்டு சரியாக உச்சிரிக்க முடியாது என்பதை நான் எவ்வாறு உறுதி செய்தேன் என்பதை விளக்கப்போகின்றேன்.

  • பாடத்தை கற்பிக்கும் போது குறித்த மாணவன் வேறு செயற்பாடுகளில் ஈடுபடுவதோடு ஏணைய கற்கும் மாணவர்ளுக்கும் இடையூறு விளைவித்தல்: இவ்விடயத்தை தொடர்ந்து அவதானித்ததன் விளைவாக இம் மாணவனை தொடர்ச்சியாக கண்கானிக்க நேரிட்டது. மேலும் பின்வரிசை மாணவகாவும் இருந்தான். இதன் காரணமாக நான் இம்மாணவனிடம் காணப்படும் மூல பிரச்சினைய அறிய பல வகையான சோதணைகளை மேற்கொண்டேன். இப்பிரச்சினை உறுதி செய்ய.
  • அம்மாணவனை வகுப்பறைக் கற்பித்தலில் போது பாடத்தில்; வரும் கதை ஒன்றை வாசிக்க சொன்ன பொழுது எழுந்து நின்று எவுதும் வாசிக்காமல் அப்படியே நின்றான். நான் மாணவனை வாசிக்க மறுபடியும் சொன்ன போது வாசிக்க முற்பட்ட பொழுது எழுத்துக்களை இனங்கண்டு உச்சரிக்கவும் சிறமப்பட்டான். இதன் மூலம் இம்மாணவனுக்கு உள்ள மொழிவிருத்திசார் பிரச்சினையை மேலும் உறுதி செய்தேன்.
  • மேலும் இப்பிரச்சினையை உறுதி செய்ய அவனது அப்பியாசக் கொப்பிகளை அவதானித்த போது நான் வகுப்பில் இதற்கு முன்னர் வாய் மொழிமூலம் கொடுத்த குறிப்புக்களை உரிய முறையில் முழுமையான எழுதப்படவில்லை.
  • பெற்றோர்களுடன் இப்பிர்ச்சினை தொடர்பாக கலந்துறையாடிய போது அவர்களுக்கும் சரியாக எழுத வாசிக்க தெரியாத உண்மையை கண்டறிந்தேன். மேலும் அம்மாணவனை பாலர் பாடசாலைக்கும் ஒழுங்காக அனுப்பவில்லை என்ற கசப்பான உண்மையும் தெரியவந்தது.

இவ்விடயங்களை கருத்திற் கொண்டு நான் ஒரு முடிவுக்கு வந்தேன். இம் மாணவனுக்கு சிறு வயதிலிருந்து தாய் மொழியான தமிழ் உரிய முறையில் படிப்படியாக போதிக்ப்பட்டவில்லை என்ற எடுகோலைக் கொண்டு இம்மொழிவிருத்திசார் பிச்சினையை பாட ஆசிரியர் என்ற வகிபாகத்தினூடாக உறுதி செய்தேன்.

மேலே இனங்காணப்பட்ட மொழிவிருத்திசார் பிரச்சினையானது தெரிவு செய்யப்பட்ட பிள்ளையின் அறிவாற்றல் விருத்தியில் எவ்வாறு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கான மூன்று (03) காரணங்களை பரிசீலிக்குக.

மொழி கருத்துக்களினதும் ஒலிகளினதும் வடிவங்களினதும் ஒழுங்கமைப்பாகும். மொழி சிந்தனையின் பிரதான கருவியாகும். மொழி பண்பாட்டுக் கண்ணாடி, எதனைச் சிந்திப்பதாக இருந்தாலும் பேசுவது எழுதுவது போன்ற செயற்பாடுகளினூடாக பிறருடன் தொடர்பு கொள்வதாக இருந்தாலும் மொழி - யையே பெரிதும் பயன்படுத்துகின்றோம்.

மேலுள்ள பந்தியை நோக்கும்போது பிள்ளையின் அறிவாற்றல் விருத்திக்கு மொழிசார் விருத்தி அத்தியவசியமான ஒன்றாக கணப்படுகின்றது எனலாம். பிள்ளைக்கு சிறுவயதிலிருந்து மொழிசார் விருத்தி சீராக வழங்கப்படும்போது தான் பிள்ளையின் வயதிற்கு ஏற்றவாறு அறிவாற்றல் விருத்தி ஏற்படுகின்றது என அனேகமான கல்வி உளவியலாளர்களின் ஏகோபித்த கருத்தாகவும் இருக்கின்றது.

பிள்ளையின் அறிவாற்றல் விருத்தியில் மேலே இனங்காணப்பட்ட மொழிசார்விருத்தி பிரச்சினை எவ்வாறு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என மூன்று காரணங்களைக் கொண்டு பரிசிலிப்போம்.

கல்வி கற்பதில் நாட்டமின்மை : பொதுவாக மாணவர்களுக்கு தாய் மொழயில் அடிப்படை எழுத்து தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்ற பொழுது ஏனைய பாடங்களை கற்பதில் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது. சில பிரச்சினைகள் பின்வருமாறு

  • வாசிப்புப் பிரச்சினை
  • வினாக்களை கிரகிக்கும் பிரச்சினை
  • எழுத்துப் பிரச்சினை
  • எண்ணக்கருக்களை கட்டியெழுப்பும் பிரச்சினை.

போன்ற சில பிரச்சிகைளை பட்டியற்படுத்தலாம். இப்பிரச்சினைகளை ஆரம்பத்தில் இனங்கண்டு தீர்ப்பதற்கு உரிய பரிகார செயற்பாடுகளை ஆசிரியர் மற்றும் பெற்றோர் சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டும், ஆனால் அவ்வாறு மேற்கொள்ளாதவிடத்து இப்பிரச்சினையானது, மாணவன் படிப்படியாக வகுப்பேற்றம் பெற்றுச் செல்லும்போது பாரிய பிரச்சினையாக மாற்றம் பெற்று, குறித்த மாணவனில் உளவியல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இதன் விளைவாக கல்வி கற்பதில் நாட்டமின்மை ஏற்பட்டு பாடசாலை வருவதை முற்றாக நிறுத்த வாய்ப்புகள் அதிகம் அதாவது பாடசாலையைவிட்டு இடைவிலக நேரிடும்.

தாழ்வு மனப்பாங்கு ஏற்படுகின்றமை : வகுப்பறையில் எழுத வாசிக்க ஒன்றுமே தெரியதா பிள்ளைகளை சில ஆசிரியரகள் கூட கவனம் எடுப்பதில்லை. மேலும் வகுப்பிலுள்ள சக மாணவர்களும் தரக் கூறைவாக பார்க்கின்ற காலமா தற்காலம் இருக்கின்றது தான் கசப்பான உண்மை. இவ்வாறான செயற்பாடுகள் தொடரச்சியாக இடம் பெறும்போது குறித்த பிரச்சினையுடைய மாணவனுக்கு தாழ்வு மனப்பாங்கு ஏற்பட்டு நன்னடத்தை பிறழ்வு ஏற்படும் வாய்ப்புகள் தற்கால சூழலில் அதிகம் கனப்படுகின்றன.

பெற்ற அறிவை வெளிப்படுத்த முடியாமை : தான் கற்றல் செயற்பாடுகளில் கேட்டல் மூலம் பெற்றுக்கொள்ளும் அறிவினை எழுத்து வடிவத்தினூடா வெளிப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் குறித்த மாணவன் பல வகையான மன உளைச்சல்களுக்கு ஆளாகின்றான். இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த மாணவனுக்கு உரிய முறையில் பரிகாரக் கற்பித்தல் மேற்கொள்ளப்பட வேண்டும். தவரும் பட்சத்தில் குறித்த மாணவனின் எதிர்கால வாழ்ககையில் பல வகையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேற்கூறப்பட்ட விடயங்களை அவதானிக்கும் பொழுது மொழிசார்விருத்தியானது குழந்தை விருத்தியில் எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வகிக்கின்றது என்பதனை விளங்கக் கூடியதாக இருக்கின்றது. தாய் மொழியில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் சிறுபராயத்தில் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படை அம்சமாக காணப்டுகின்றது என்பதில் எவ்விதமான மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. இதனையே குழந்தை விருத்திக் கோட்பாடுகளை முன்வைத்த உளவியலாளர்களின் ஏகோபித்த கருத்தாகவும் இருக்கின்றது.

குறித்த பிரச்சினையை வெற்றிகொள்வதற்காக இம்மணவருக்காக நீங்கள் பயன்படுத்தக்கூடிய மூன்று (03) நுட்பங்களை விதந்துரைக்குக.

மொழிவிருத்திசார் பிரச்சினைகளில் எழுத்துக்களுடன் தொடர்பான அடிப்படை பிரச்சிiகைகளை வெற்றிகொள்வதற்கு குறித்த மாணவனுக்கு பின்வரும் நுட்பங்களை பயன்படுத்தி தீர்வுகான முடியும்.

செயல்நிலை ஆய்வினை மேற்கொள்ளல் : ஆசிரியர், குறித்த பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான இலக்குகள், நியதிகள் மற்றும் தலையீட்டுத்திடங்களை தயாரித்து குறித்த கால வரையறைக்குள் திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொள்விதினூடாக குறித்த பிரச்சினையை வெற்றிகொள்ள முடியுமான நுட்பமாக விதந்துறைக்க முடியும்.

தொடர்ச்சியான பயிற்சி வளங்குதல் : பிரச்சினையை நிவரத்தி செய்ய ஆசிரியர் தொடர் பயிற்சிகளை மாணவனுக்கு ஊக்கல் செயற்பாடுகளினூடாக வழங்குதல். இதன் மூலமும் குறித்த பிரச்சினையை வெற்றிகொள்ள முடியுமான நுட்பமாக விதந்துறைக்க முடியும்

பரிகாரக் கற்பித்தலை மேற்கொள்ளல் : குறித்த இடர்பாட்டினை நிவர்த்தி செய்ய ஆசியர், மாணவனுக்கு வகுப்பறையிலும் மற்றும் மேலதிக நேரங்களை ஒதுக்கி, மாணவனில் அக்கறை காட்டி பரிகாரக் கற்பித்தலை மேற்கொள்வதன் மூலமும் குறித்த பிரச்சினையை வெற்றிகொள்ள முடியுமான நுட்பமாக விதந்துறைக்க முடியும்.

நான் இப்பிரச்சினையை வெற்றிகொள்ள மூன்று நுட்பங்களை முன்வைத்துள்ளேன் ஆனால் கல்விப் புலத்தில் மாணவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை பொருத்து பல வகையான நுட்பங்களை பயன்படுத்தி அவர்களை அப்பிரச்சிiகைளிலிருந்து விடுவித்துக்கொள்ள முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு ஆசிரியர்களின் முழுமையான அற்பணிப்புடன் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

MNSM. Yoosuf  B.Sc. in MIT (SEUSL), PGDE (MERIT) NIE, M.Ed. (R) OUSL

BT/BC/KAWATHAMUNAI AL AMEEN MAHA VID.


Post a Comment

0 Comments