அலகு I உளவியல் ஓர் அறிமுகம் | UNIT I - INTRODUCTION TO PSYCHOLOGY



அறிமுகம்

உளவியல் (Psychology) என்னும் சொல்லுக்கு ஏராளமான வரையறைகள் உள்ளன. பழங்காலத்தில், உளவியல் என்பது ஆன்மாவைப் பற்றிப் பயிலும் அறிவியல் எனக் கருதப்பட்டது. பின்னர், தத்துவ இயலானது உளவியல் என்பது மனம்பற்றி முறையாக ஆராய்தல் என வரையறுத்தது. இச்சொல்லானது, மனித நடத்தை பற்றிய அறிவியல் (The Science Of Human Behaivour) என வரையறுக்கப்படுகிறது. போரன் (Baron 2003) என்பவர் உளவியல் என்னும் சொல்லை நடத்தையையும், அறிவுப்புலச் செயல்பாடுகளையும் விளக்கும் அறிவியல் என வரையறுக்கிறார். உளவியல் என்னும் சொல்லானது சைக்கீ (Psyche) லோகஸ் என்னும் இரு கிரேக்கச்சொற்களில் இருந்து வந்ததாகும். சைக்கீ (Psyche) என்றால் ஆன்மா, மனம் அல்லது சுயம் (Soul Mind or Self) என்றும், லோகஸ் (Logos) என்றால் ஆராய்தல் என்றும் பொருள் கூறப்படுகிறது. மனித நடத்தையைப் பற்றி விவரிக்கும் அறிவியலே உளவியல். மனித நடத்தையின் உள்ளார்ந்த பண்புகளையும் எளிதில் புலப்படக்கூடிய வெளிப்புறப் பண்புகளையும், உளவியல் ஆராய்கிறது.

உளவியல் வரைவிலக்கணங்கள்

வில்லியம் மெக்டூகல் (William Mc Dougal) - "உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றை பற்றிப் படிப்பதாகும்".

குர்த் கோப்கா (Kutkofka) - “ஓர் உயிரி சுற்றுப்புறத்துடன் தொடர்பு கொண்டு வெளியிடும் நடத்தைகளைப் பற்றிய அறிவே உளவியலாகும்”;.

எல்.எப்.போரிங் (L.F. Boring) - "மனிதனின் இயற்கைப் பற்றி ஆராய்வதே உளவியல்" என்கிறார்.

உட்வொர்த் (R.S Woodworth) – “உளவியல் என்பது ஓர் சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட தனிநபரின் நடவடிக்கைகள் பற்றியதோர் அறிவியல்”

லெஸ்டர் குரோ மற்றும் ஆலிஸ் குரோ (Lester D. Crow and Alice Crow) –“உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவுமுறைகளைப் பற்றிப் படிப்பதாகும்."

உளவியல் கோட்பாடுகள்

ஆரம்பத்தில், உளவியல் என்பது ஆன்மாவைப் பற்றி அதன் இருப்பிடம், அதன் தன்மைகள், இறப்புக்குப் பின் அதன் நிலை போன்றவற்றை ஆராய்வதாகஅமைந்து, தத்துவ இயலின் ஓர் உட்பிரிவாக இயங்கியது. உளவியல் என்பது ஆன்மாவைப் பற்றிய ஆய்வு என்ற கருத்து கைவிடப்பட்டு, மனம் என்பதோடு தொடர்புபடுத்தப்பட்டது. மனம் மூன்று நிலைகளில் இயங்குகிறது சிந்தித்தல், உணர்தல் மற்றும் புறச்செயல்களைத் தூண்டுதல். மன இயக்கச் செயல், உடலியக்கச் செயலிலிருந்து வேறுபட்டது. டிட்ச்னரின் (Titchner) வடிவமைப்புக் கோட்பாடுப்படி மனம், அறிவுசார் இயக்கமுடையது. இதன் கூறுகளாக புலன் உணர்ச்சி, உணர்வுகள், மனபிம்பங்கள் அமைகின்றன. மன இயக்கத்தின் வடிவமைப்பையும், தன்மையையும் அறிய அக நோக்கு முறையே ஏற்புடையது. உளவியல் என்பது மனிதன் உணர்ந்து செயல்படும் நடத்தைகளை (Conscious Behaviour) மட்டுமே ஆராய்வதாகும்.

  1. நடத்தையியல்

உளவியல் அறிஞர்களான J. B. வாட்சன், டோல்மன், ஹப், ஸ்கின்னர் போன்றோர் உளவியலை நடத்தையியல் என்றே குறிப்பிடுகின்றனர். கண்ணால் காண முடியாத உள்ளத்தைப் பற்றி அறிவதைவி;ட கண்ணால் பார்க்கக் கூடிய நடத்தையை உளவியலின் பொருளாகக் கொள்வதே அறிவுடைமையாகும் என்று உணர்த்தினர். சிந்தனை என்பது உள்ளத்தின் செயல் என்பதை வாட்சன் மறுக்கிறார். மரபுக் கொள்கையை வாட்சன் ஏற்றுக்கொள்ளவில்லை. சூழ்நிலையே, மனிதனை உருவாக்குகிறது என்றார். நடத்தைவாதிகள் மக்டுகலின் இயல்பூக்கக் கொள்கையையும் மறுத்தனர். சூழ்நிலை வாதியான பர்னார்ட் (Bernard) பயம், பாலுணர்வு, கூடி வாழ்தல் ஆகிய இயல்பூக்கங்களை நாம் அவற்றின் வழியே செயல்படவிடுவதில்லை என்றும், அவற்றைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்துகிறோம் என்றும் கூறுகிறார். சூழ்நிலையே ஒருவனுடைய நடத்தை மாற்றத்திற்குப் பெரும் காரணமாகிறதென்றார். நடத்தைக் கோட்பாடினர் மனிதரின் நடத்தையை மறுவினை வாயிலாக தெளிவுறுத்தினர். ஒவ்வொரு தூண்டுதலுக்கும் ஒவ்வொரு துலங்கள் உண்டு என்றும் தூண்டல், துலங்கள் இணைப்பே நடத்தை என்றும் வாதிட்டனர்.

2 அறிதல்

1912-ம் ஆண்டு, நடத்தைக் கோட்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முழுமைக் காட்சிக் கோட்பாடு (Gestalt) என்ற புதிய கொள்கை உளவியலில் உதயமாயிற்று. முழுமைக் காட்சிக் கோட்பாடு என்பது எதனையும் தனித்தனிப் பாகங்களாகப் பார்க்காது முழுமையாகப் பார்க்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதாகும். ஒரு சைக்கிளைப் பார்க்கும்போது சக்கரம், மணி, ஹாண்டில் பார் என்று பிரித்து, பல பாகங்களின் தொகுப்பாகப் பார்க்காது, ஒரு முழு வடிவமாக, இயங்கும் பொருளாக பார்க்கிறோம். இதுவே முழுமைக் காட்சிக் கோட்பாடாகும். கெஸ்டால்ட் (Gestalt) என்ற ஜெர்மனிய சொல்லுக்கு உருவம், வடிவம் என்று பொருள் கொண்டு, காட்சிப் பொருட்களை முழு உருவ அமைப்போடு காணுதல் என்று விளக்கமளிக்கப்படுகிறது. முழுமை காட்சியை மணந்தால் உணர்வதற்குப் புலன் உணர்ச்சியோடு ஏற்கனவே நாம் பெற்ற அனுபவங்களும் துணை புரிகின்றன. முழுமைக் காட்சிக் கோட்பாட்டினர் மனித நடத்தை புலன்காட்சி அடிப்படையில் அமைகிறதென்றும், புலன்காட்சி பெற்ற சிந்தனையும், அறிவுத் திறனும் அவசியம் என்றும் வாதிடுகின்றனர். ஒரே தூண்டல் எல்லோரிடமும் ஒரே வகையான துலங்களை ஏற்படுத்துவதில்லை. அவரவர் அனுபவத்திற்கேற்ப துலங்கலை வெளிப்படுத்துகின்றனர்.

3 உளப்பகுப்பு

சிக்மண்ட் பிராய்டு உளப்பகுப்புக் கோட்பாட்டை நிறுவினார். மனிதனுடைய நடத்தையை நிர்ணயிப்பதில் அவனுடைய அடிமன ஆழத்தில் அமைந்திருக்கும் நனவிலி; மனத்தின் முக்கியத்துவத்தை இவ்வுளப்பகுப்பாய்வு கோட்பாடு வலியுறுத்துகிறது. ஆட்லர் தனிநபர் உளவியலையும், யுங் பகுப்பு உளவியலையும் தோற்றுவித்தனர். இவர்களைத் தொடர்ந்து கார்ல், மாஸ்கோ ஆகியோர் மனிதநேய உளவியலை (Humanistic psychology) முதன்மைப்படுத்தினர்.

உளவியல் முறைகள்

ஒருவரின் நடத்தையை அளந்தறியப் பல உளவியல் முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உளவியல் முறைகளைப் பயன்படுத்தி, ஆசிரியர் தமது மாணவர்களின் நடத்தையைப் புரிந்து கொள்ள முடியும். இங்கே ஏழு உளவியல் முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

  •    சுயபரிசோதனை - விளக்கம்

ஒருவர் தன்னுடைய மனநிலையைத் தானே சுயபரிசோதனை செய்து கூறும் முறைக்கு சுயபரிசோதனை (Introspection) எனப்பெயர். சுயபரிசோதனையில் ஒருவரின் சொந்த அனுபவங்களின் சுய வெளிப்பாடு நிகழ்கிறது. 

நிறைகள் உள்நோக்கியறிதலில் உற்றுநோக்குபவரும், உற்று நோக்கப்படுபவரும் ஒரு முறை என்பதால் இம்முறையை ஒருவர் எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம் ஒருவரின் மனமே சுயபரிசோதனைக்கு உதவும் கருவியாகவும், களமாகவும் விளங்குவதால் இம்முறையைச் செய்து பார்க்க சோதனைச் சாலையை நாட வேண்டியதில்லை, செலவும் குறைவு. இதில் நேரடியான, உண்மையான அனுபவ வெளிப்பாடு கிடைக்கிறது.

  • உற்றுநோக்கல் முறை (Observation)

பிறரது நடத்தையினைக் கூர்ந்து கவனித்தறிதல் உற்றுநோக்கல் எனப்படும். சிறு குழந்தைகள், விலங்குகள் போன்றவற்றின் நடத்தையில் இயல்புகளை அறிய இம்முறை பயனுள்ளதாகும். குழந்தை உளவியலிலும் இம்முறை சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்களது இயல்புகளை அறிவதற்கும், திறன்பதிவிற்கான விபரங்களைத் திரட்டுவதற்க்கும் ஆசிரியர்கள் இம்முறையைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட நடத்தை, வரையறுக்கப்பட்ட கால இடைவெளியில் எத்தனை முறை நிகழ்கிறது என்றும், குறிப்பிட்ட கால இடைவெளியில் என்னென்ன நடத்தைகள் வெளியிடப்படுகின்றன என்றும் ஆராய்ந்தறிய உற்றுநோக்கல் முறை பயன்படுகிறது. உற்றுநோக்கல் முறையைப் பயன்படுத்தும் போது அதில் நான்கு வித செயல் நிலைகள் இடம் பெறுகின்றன.

 புலன்காட்சி

 நடத்தையை குறித்துக் கொள்ளுதல்

 சேகரிக்கப்பட்ட நடத்தைக்கூறு விபரங்களை பகுத்து ஆராய்தல்

 பொது உண்மைகளைப் பெறுதல்.

பங்கேற்கும் - பங்கேற்கா உற்றுநோக்கல், இயற்கையான - செயற்கையான உற்றுநோக்கல், திட்டமிடப்பட்ட- ஏதேச்சையாக நிகழ்ந்த உற்றுநோக்கல் என்று பலவகை உற்றுநோக்கல்கள் உண்டு.

உற்றுநோக்கல் முறையை செம்மைப்படுத்தல்

 நோக்குவோர் பலர் ஒரே காலத்தில் ஒருவனது நடத்தையை உற்று நோக்கி, உணர்ந்தவற்றை உடனுக்குடன் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பல்வேறு குறிப்புகளைப் பின்னர் ஒப்புநோக்கி ஆராய்தல் வேண்டும்.

 உற்று நோக்கப்படுவோரது நடத்தையின் ஒரு கூறை மட்டும் ஒரு சமயத்தில் கவனித்தல் நன்று.

 தாம் பிறரால் கவனிக்கப்படுகிறோம் என உற்று நோக்கப்படுவோர் தானே உணர்ந்தால் எழும் கூச்சத்தின் காரணமாக அவரது நடத்தை இயற்கையாக அமையாது போய்விடும். ஆகவே, உற்று நோக்கப்படுவோர்க்குத் தெரியாமலேயே அவரின் நடத்தை ஆராயப்பட வேண்டும்.

 உற்று நோக்கலால் பெறப்படும் கருத்துகள் உண்மையானவையாக அமைய வேண்டுமாயின், நமது அனுபவங்களையும், ஊக்கங்களையும் கவனித்தறிந்த விபரங்களுடன் கலக்கக் கூடாது.

 உற்றுநோக்கலில் முறையான பயிற்சி பெற்றவரை மட்டுமே உற்று நோக்க அனுமதிக்க வேண்டும். புறவயத்தன்மையை அதிகரிக்க உற்றுநோக்கலில் மின் கருவிகளான காமிரா, டேப்ரிக்கார்டர், கண்ணாடித் தடுப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

 எதை உற்று நோக்க வேண்டும், எவ்வளவு காலம் இதில் ஈடுபட வேண்டும், உற்று நோக்கலின் நோக்கம் முதலியவற்றை முன்கூட்டியே உற்றுநோக்குவோர்க்கு உணர்த்திட வேண்டும்.

உற்றுநோக்கலின் பயன்பாடு

வகுப்புச் செயல்களில் மாணவன் எந்த அளவுக்குப் பங்கு பெறுகிறான் என்பதையும், அவனது படிக்கும் பழக்கங்கள், ஒப்படைப்புகளை முடிக்கும் திறன், சுயகட்டுப்பாட்டின் (ளுநடக உழவெசழட) அளவு, சமூகப் பண்புகள், மொழித்திறன்கள், மொழிக் குறைபாடுகள், உடல் குறைபாடுகள், வகுப்பில் கவனம், தண்டனைகளைப் பற்றிய அவனது மனப்பான்மை போன்றனவும் ஆசிரிரால் உற்று நோக்கப்பட்டு, திறள்பதிவேட்டில் குறிப்பி;படவேண்டும்.

வாழ்க்கைத் துணுக்கு முறை

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் முக்கியமாக இளமைப்பருவத்தில், சில குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சிகள் அவரது மன இயல்புகளையும், ஆற்றல்களையும் தெளிவாக எடுத்துக்காட்டுவனவாகும். இத்தகைய வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வைத்தல் வாழ்க்கைத் துணுக்குமுறை எனப்படும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் பற்றிய வாழ்க்கைத் துணுக்குகளைக் குறித்து வைத்திருப்பர். ஆனால் இத்தகைய குறிப்புகள் பெரும்பாலும் அகவயப்பட்டனவாகும். உண்மையை திரித்துக் கூறுவனவாக இருக்கக்கூடும். வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் குறித்து வைக்கும் போது தேவைப்படுவது தேதி, நிலைமை, நிகழ்ச்சி பற்றிய உண்மை விபரம், அதனுடன் தொடர்புடைய வேறு நிகழ்ச்சிகள், போதிய எண்ணிக்கையிலும், வரிசைக்கிரமத்திலும் நிகழ்ச்சிக்குறிப்புகள் ஆகியவனவாம். ஆசிரியரும் தமது மாணாக்கரது பள்ளி வாழ்க்கையில் தோன்றும் முக்கிய நிகழ்ச்சிகளைக் குறித்து வைத்திருப்பார்கள். அது அம்மாணக்கரது இயல்புகளை நன்கறிய துணை செய்யும்.

வாழ்க்கைத் துணுக்கு முறையின் குறைபாடுகள்

 உற்றுநோக்கலில் பெறப்பட்ட விபரங்களோடு தமது கருத்துகளையும், ஊக்கங்களையும் பலர் சோதிக்கக்கூடும்

 விவரிக்கப்படும் நடத்தை, அது நிகழும் சமூகப் பின்னணியினின்றும் தனிமைப்படுத்தப்பட்டுக் குறிக்கப்பட்டால், அதன் உண்மைத் தன்மை தெரியாது . பெரும்பாலும், அசாதரண நடத்தை மட்டும் குறிக்கப்பட்டு, அதுவே சாதாரண நடத்தையாகக் கருதப்படுவதுண்டு

கள ஆய்வு முறை

ஒரு நிகழ்ச்சியை, அது நிகழும் இயற்கையான சூழ்நிலையில் உற்று நோக்கி ஆராய்தல் கள ஆராய்ச்சி முறையெனப்படும். சமூக உளவியலிலும், கல்வி உளவியலிலும் இம்முறை பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. கள ஆராய்ச்சியில் வினா வரிசைகள், தர அளவு கோல்கள், குறியீடு பட்டியல்கள் போன்றவையும் பயன்படுத்தப்படும்.

பரிசோதனை முறை - விளக்கம்

பரிசோதனை என்பது கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்றுநோக்கல் (Controlled Observation)  எனக் கூறலாம். ஒரு கோட்பாடு அல்லது கருதுகோளினை சரிபார்த்தலுக்காக ஓர் ஆராய்ச்சியாளனால் முயன்று திட்டமிட்டு உருவாக்கப்படும் நிகழ்ச்சி பரிசோதனையாகும். இக்கோட்பாடு அல்லது கருதுகோள், காரண காரியத் தொடர்பை குறிப்பதாக இருக்கும். ஆராய்ச்சிக்கு உட்பட்ட நிகழ்ச்சியுடன் தொடர்புடைய பல்வேறு காரணிகளைக் கட்டுப்படுத்துவதற்கும், சோதனையின் விளைவுகளை நுட்பமாக அளவிடுவதற்கும் ஆய்வுக் கூடங்களில் பல்வேறு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. முதன்முதலில், 1879-ம் ஆண்டு, ஜெர்மனியில் உளவியல் ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டது.

பரிசோதனை முறையின் நிறை குறைகள்

வளர்ச்சி ஆய்வு முறை
குழந்தைப்பருவம் தொடங்கி, ஒருவன் முதிர்ச்சியடையும் வரை பண்புகளும், நடத்தைகளும் எப்படி வளர்ச்சியடைகின்றன, எவ்விதங்களில் மாறுபாடு அடைகின்றன என்பவற்றை அறிய வளர்ச்சி முறை உதவுகிறது. வளர்ச்சி முறை இருவகைப்படும்:
  • நீள ஆய்வு முறை
  • குறுக்கு ஆய்வு முறை
வளர்ச்சிப்படி நிலையிலுள்ள பல குழந்தைகளை தொடர்ந்து பல ஆண்டுகள் உற்று நோக்குவது நீள ஆய்வு முறையாகும். பல வளர்ச்சி நிலைகளிலும் பலரது நடத்தையைக் கவனித்து உற்றுநோக்கல் குறுக்கு ஆய்வாகும். சிறு குழந்தைகளது விளையாட்டுகள் அவர்களது
தனித்தன்மையைப் பிரதிபலிப்பனவாக அமைகின்றன.

நிகழ்வுக்கூறு ஆய்வு முறை (Case Study Method)
தனிநபர் ஒருவரிடம் காணப்படும் பிரச்சனைக்குரிய நடத்தைக்கான காரணங்களை அறிவியல் முறைப்படி கண்டறிந்து, அவற்றை நீக்கிட விரிவான வகையில் அந்நபர் தொடர்பான விபரங்களை சேகரித்து, அவற்றை முறையாக ஆய்வு செய்து, ஆய்வின் அடிப்படையில் தகுந்த தீர்வினைப் பரிந்துரைத்து செயற்படுத்திடலே நிகழ்வுக்கூறு ஆய்வு எனப்படும். பொதுவாக இம்முறை, தனிநபர் அல்லது நிறுவனத்தின் குறிப்பிட்ட பிரச்சனையை ஆய்வு செய்து, குறிப்பிட்ட நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கு அதிகம் பயன்படுத்தப்படுவதால் இதை மருத்துவஆய்வு முறை என்றும் குறிப்பிடுவர். பள்ளி மாணாக்கர் சிலரிடம் காணப்படும் நெறிப்பிறழ்வு, கல்வியில் பின்தங்கியிருத்தல், பள்ளிக்குக் காலந்தாழ்ந்து வருதல், பிற மாணவர்களை சீண்டிக் கொண்டிருத்தல், வகுப்பறையில் கவனமின்மை, பிற மாணவர்களோடு கூடிப் பழகாமல் ஒதுங்கியிருத்தல், பொய் பேசுதல், ஆசிரியர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ளாமை போன்ற பிரச்சனைக்குரிய நடத்தைக்கான அடிப்படைக் காரணங்களை ஆய்வு மூலம் கண்டறிந்து, இத்தகைய நிலைகளைப் போக்க இம்முறை உதவுகின்றது. தற்போது இம்முறை விரிவுபடுத்தப்பட்டு, திறமையாக செயல்படும் நிறுவனத்தையும், மீத்திறம் பெற்று விளங்குபவரையும் விரிவாக ஆராய்ந்து அவற்றிலிருந்து கண்டறிந்தவற்றை மற்ற நிறுவனங்களுக்கும், நபர்களுக்கும் வழிகாட்டி ஆலோசனைகள் வழங்கிட பயன்படுத்தப்படுகிறது. எனவே தற்காலத்தில் இம்முறை தனியலகு ஆய்வு முறை என்றழைக்கப்படுகிறது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் அலகு, தனிநபராகவோ, நிறுவனமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினராகவோ இருக்கலாம். தனியலகு ஆய்வில், விபரங்களை சேகரிப்பதற்கு உற்று நோக்கல், பேட்டி, தர அளவுகோல்கள், நுண்ணறிவுச் சோதனை, நாட்டச் சோதனை, வினாவரிசை, மனப்பான்மை அளவுகோல்கள், ஆளுமைச் சோதனைகள் போன்றவை தனியாகவோ, இணைத்தோ பயன்படுத்தப்படும். சேகரித்த விபரங்களிலிருந்து ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட அலகின் தற்போதைய நிலை, முந்தையகால வரலாறு, எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் நிலைமைகள் ஆகியவற்றை தெளிவுபடுத்தும் வகையில் பகுத்தாயப்பட்டு பரிந்துரைக்கப்படும்.

தனியாள் ஆய்வில் இடம்பெறும் படிநிலைகள்

பிரச்சனைக்குரிய அலகை தேர்வு செய்தல்

முதலில் விரிவான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் அலகைத் தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக, பள்ளி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபாடு காண்பிக்காத மாணவர், தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்து காணப்படும் பள்ளி, நலிவுற்ற தொழிற்சாலை போன்ற ஆய்வுக்குரிய அலகினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுத்த அலகு குறித்த தகவல்களைப் பல்வேறு வழிகளிலும் திரட்டி உற்றுநோக்கல், நேர்காணல், வினாநிரல் தேவையான உளவியல் சோதனைகள், மனப்பான்மை அளவுகோல்கள், தர அளவு கோல்கள் ஆகியவற்றை தனியாகவோ, இணைந்தோ பயன்படுத்தி ஆய்வுக்குரிய நபர்/நிறுவனத்தைப் பற்றிய அனைத்து வகைத் தகவல்களையும் முழுமையாகப் பெற முயற்சிக்க வேண்டும். 

பிரச்சனைக்கான காரணங்களை ஊகித்தல் 

சேகரித்த தகவல்களை முழுமையாக, ஆராய்ந்து, பிரச்சனைக்கான காரணங்களை ஊகித்தறிய வேண்டும். பிரச்சனையைப்பற்றி நாம் ஏற்கனவே பெற்றிருக்கும் அறிவும், அனுபவங்களும், பிரச்சினைக்குரிய நபரின் நடத்தைக்கான காரணங்களைத் தீர்மானிக்க பெரிதும் உதவும்.

பிரச்சினையை சீர்செய்யும் முறைகளை வகுத்தல்

பிரச்சினைக்குரிய காரணங்களை ஊகித்தறிந்த பின், அவற்றை நீக்கிடும் வழிமுறைகளை வகுத்து, அவற்றை குறிப்பிட்ட கால அளவு செயற்படுத்திப்பார்த்தலே அடுத்த படிநிலையாகும். உதாரணமாக, மாணவர்களை உளவியல் ஆலோசனைக்கு உட்படுத்துதல், பெற்றோருடன் விவாதித்தல், படிப்பதற்கு பண உதவி செய்தல், தன்னம்பிக்கையை வளர்த்திடும் நூல்களைப் படிக்கச் செய்தல், நண்பர்களின் தொடர்புகளைக் கண்காணித்தல் போன்ற பல்வகை அணுகுமுறைகளையும் ஒரு சேர பயன்படுத்திப் பார்க்கலாம்.

தொடர்ணி

இதுவே இவ்வகை ஆய்வின் இறுதிப்படி நிலையாகும். மாணவரின் பிரச்சினைக்குரிய நடத்தையின் அளவை, தொடர்ச்சியாக அவ்வப்போது கண்காணித்து வருவதன் மூலம், பரிந்துரைக்கப்பட்ட சீர்திருத்தும் முறைகள் எந்த அளவு பயனுள்ளவையாக அமைந்துள்ளனஎன்பதைக் காண முடியும். 10 நிகழ்வுக்கூறு ஆய்வின் முக்கியத்துவம் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் நிகழ்வுக்கூறு ஆய்வுகள் பல்வேறு நோக்கங்களை நிறைவு செய்கிறது. அவை :

 பாதிப்புக்கு உள்ளான மாணவரிடம் தனிக்கவனம் செலுத்தி அவரது பிரச்சனைக்கான காரணத்தை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து, அதற்கான தீர்வையும் பரிந்துரைக்கிறது.
 சேகரிக்கப்பட்ட விபரங்கள் பொருத்தமானதாகவும், நம்பகத்தன்மை மிக்கதாகவும் இருத்தல் வேண்டும்
 ஆய்வு தொடர்ச்சியாக நடத்தப்பெறல் வேண்டும்
 சேகரிக்கப்பட்ட விபரங்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட்டு ஆய்வுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்
 ஓவ்வொரு நிகழ்வுக்கூறு ஆய்வு முடிவுகளும் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்

வினா வரிசை முறை

இம்முறையும், இன்று உளவியலிலும், சமூகவியலிலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆய்வுக்குட்பட்ட நிகழ்ச்சி பற்றிய பல சிறு வினாக்கள் வினாவரிசையில் கொடுக்கப் பட்டிருக்கும். இவற்றிற்கான விடைகளைக் குறிப்பிட - ஆம், இல்லை, நிச்சயமாக சொல்ல இயலாது என்று சிறு அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். இவ்வினாக்களுக்கு பலர் அளிக்கும் விடைகளை ஆராய்வதன் மூலம், இந்நிகழ்ச்சி பற்றிய விளக்கம் பெற முடியும். இம்முறையை உளவியல் ஆராய்ச்சிக்கு முதன்முதலில் பயன்படுத்தியவர் கால்டன் என்பவராவார். பொதுவாக வினாவரிசை நிர்வாக முறையைப் பின்வரும் தருணங்களில் பயன்படுத்தலாம்:

 குறுகிய காலத்துக்குள் பல வினாக்களுக்கு விடை பெற வேண்டிய தருணம்.
 ஆராய்ச்சிக்கு உதவக் கூடியவர்களை நேரடியாக அணுக இயலாத தருணம்.
 தனி நபரோடு நெருங்கிய தொடர்பற்ற, பொதுப்படையான விபரங்கள் தேவைப்படும் தருணம்.
 தனி மனிதர்களை ஒரு அணியிரணுடன் ஒப்பிட வேண்டிய தருணம்.
 குழுக்களை ஒப்பிட்டு முடிவெடுக்க வேண்டிய தருணம்.

உளவியலின் பிரிவுகள்
உளவியலில் பல பிரிவுகள் காணப்படுகின்றன. உளவியலில் இன்று ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பற்றி இப்பிரிவுகளின் எண்ணிக்கையை வைத்தே நாம் ஓரளவு அறியக்கூடும் இப்பிரிவுகளில் முக்கியமான சிலவற்றைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1 பொது உளவியல்
இது எல்லா உளவியல் பிரிவுகளுக்கும் அடிப்படையான, பொதுவான கருத்துக்கள் பற்றியது. முதிர்ச்சியடைந்த மனிதனின் சாதரணமான மனிதர்களின் நடத்தையை பொது உளவியல் விவரிக்கிறது. இப்பிரிவில் புலன்காட்சி, மனவுணர்ச்சிகளும், எழுச்சிகளும், ஊக்குவித்தல், கற்றல் சிந்தித்தல் போன்றவை அடங்கும். தனியாள் வேற்றுமைகளின் தன்மை, அவற்றின் அளவு, அவை தோன்றக் காரணங்கள் போன்றவற்றையும் இப்பிரிவு ஆராய்கிறது.

2 குழந்தை உளவியல்
குழந்தையின் வளர்ச்சி, இவ்வளர்ச்சியில் அதன் மரபுநிலை, சூழ்நிலை ஆகியவற்றின் பங்கு, குழந்தைகளிடம் காணப்படும் திறன்கள், இவற்றை அளவிடும் முறைகள், குழந்தை தனது சூழ்நிலையுடன் பொருத்தப்பாட்டை அடையும் வகைகள் போன்றவற்றை ஆராயும் மனவியல் பிரிவு, குழந்தை உளவியல் ஆகும். இது போன்றே குழந்தை உளவியல், குமரப்பருவ உளவியல் ஆகியவை இன்று எழுந்துள்ளன.

3 நெறிபிறழ் உளவியல்
நரம்பு நோய்கள், உள்ளத் தடுமாற்றங்கள் போன்ற கோளாறுகளால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் அசாதாரண நடத்தைகளை விவரிக்கும் பிரிவு, நெறிபிறழ் மனவியலாகும். இப்பிரிவு மன மருத்துவ இயலுடன் இணைந்ததாகும். பிராய்டின் உளப்பகுப்பாய்வு, இதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளது.

4 உடற்கூறு உளவியல்
இப்பிரிவில் மனச்செயலானது முறையான உடலியல் அடிப்படையில் ஆராயப்படுகின்றன. நரம்பு மண்டலம், புலன்கள், சுரப்பிகள் போன்றவற்றின் அமைப்பு, செயல்பாடு ஆகியன இப்பிரிவில் இடம் பெறும்.

5 ஒப்பீட்டு உளவியல்
மனிதனின் நடத்தையுடன், பிற விலங்கினங்களின் நடத்தைகளை ஒப்பிட்டு இவற்றினுள் காணப்படும் தொடர்புகளையும், வேறுபாடுகளையும் அறியும் பிரிவே ஒப்பீட்டு உளவியலாகும். மனிதர்களைக் கொண்டு நடத்த முடியாத அல்லது நடத்தக் கூடாத சோதனைகளை விலங்குகளைக் கொண்டு நடத்த முடியும்.

6 சமூக உளவியல்
ஒரு குழு உறுப்பினராக உள்ள தனி மனிதனின் நடத்தை பற்றியும், குழுக்களுக்குள் காணப்படும் தொடர்புகள் பற்றியும் இப்பிரிவு விவாதிக்கிறது.

7 நடை முறை உளவியல்
இப்பிரிவில் தொழில் பற்றிய உளவியல், விளம்பரம் பற்றிய உளவியல், கல்வி உளவியல் போன்றவை அடங்கியுள்ளன. உளவியல் உண்மைகளின் விளைவாகப் பலவாழ்க்கைத் துறைகள் பெரும் பயன் பெற்றுள்ளன. உதாரணமாக, மருத்துவத் துறையில், உடல் மன மருத்துவப் பிரிவின் வளர்ச்சியின் பயனாக உடலைச் சார்ந்த பல நோய்களைத் தீர்ப்பதில் உளவியல் முறைகள் கையாளப்படுகின்றன. இதன் விளைவாக மருத்துவ உளவியல் (Clinical Psychology) என்ற புதுப்பிரிவு தோன்றியுள்ளது. பொய் பேசுதலைக் கண்டுபிடிக்கும் முறைகள், குற்றவாளிகளைச் சீர்திருத்தும் புதிய முறைகள் போன்றன நீதித்துறையில் உளவியலின் செல்வாக்கை அதிகரித்து குற்றவியல், உளவியல் என்ற புதுப்பிரிவு தோன்றியுள்ளது. தொழில்துறையில், பல்வேறு தொழில்களின் தகுதிக்கான நுட்பச் சோதனைகள், சிறப்பாகத் தொழிலாற்ற உதவக்கூடிய சூழ்நிலையினை உருவாக்குதல், முதலாளி - தொழிலாளி உறவினை செம்மைப்படுத்துதல் போன்ற பலவற்றில் உளவியல் உதவியுள்ளது. இப்பிரிவை தொழில்துறை உளவியல் என்கிறோம். கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டினை உளவியல் ரீதியாக ஆராய்ந்து, மாணவர்களது கற்றலை மேம்படுத்த உதவும் வழிமுறைகளைக் கண்டறியும் உளவியல் பிரிவு கல்வி உளவியல் என்றழைக்கப்படுகிறது. இப்பிரிவு நடைமுறை உளவியலின் கீழ் வந்தாலும், இன்று இப்பிரிவானது விரிந்து தனித்துறையாக
உருப்பெற்று வருகிறது.

கல்வி உளவியலின் வரையறை

உளவியலின் ஒர் உட்பிரிவான கல்வி உளவியல் என்பது, கல்வியில் மேற்கொள்ளப்படும் செயல்முறைகளிலும், பின்பற்றப்படும் வழிமுறைகளிலும், உளவியல் கோட்பாடுகளையும், விதிகளையும் புகுத்தி, கற்றல் - கற்பித்தலை மேம்படுத்துதலே ஆகும் என்று கோலெஸ்னிக் என்ற இரஷ்ய அறிஞர் கூறுகிறார். பள்ளி வகுப்பறை, கல்வி உளவியலாளர்களின் ஆய்வுக்கூடம், கற்றல், கற்பித்தல், பயிற்சியளித்தல் போன்றவற்றில் எதிர்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்படுவதே கல்வி உளவியல்.

கல்வி உளவியலின் தன்மை
கல்வி உளவியல், துரிதமாக வளர்ச்சியடைந்து தனித்துறையாக தன்னை நிலைபடுத்திக் கொண்டுள்ளது. கல்வி பிரச்சனைகள் யாவும் இத்துறையின் ஆய்வுக்கு உட்படுகின்றன. குழந்தைக்கல்வி, குறையறிந்து தீர்க்கும் முறைகள், மீத்திறன் மிக்கவர்களின் கல்வி, ஊனமுற்றோர்க்கான கல்வி, கற்றலைப் பாதிக்கும் காரணிகள், கல்வி மதிப்பிடுதல், கோட்பாடுகள் போன்றவற்றை தன் ஆய்வுக்களமாக கொண்டுள்ளதன் மூலம், கல்வி உளவியல் என்பது தனித்தன்மை வாய்ந்த ஒரு சிறப்புத்துறை என்பது விளங்கும். வகுப்பறை சூழல், நடத்தை மாற்ற உத்திகள், திட்டமிட்டு கற்றல் வழிமுறைகள், நுண்திறன் கற்பித்தல், கல்வி நுட்பவியலின் மென், தளவாட அணுகுமுறைகளை பயன்படுத்துதல், கணிணி கொண்டு கற்பித்தல் போன்ற பிரிவுகளை உருவாக்கி வகுப்பறைக் கற்றலில் கற்பவர் - கற்பிப்பவர் இடையேயான இடைவெளியை மேம்படுத்த கல்வி உளவியல் பெரிதும் முயற்சிக்கிறது. உயர் கற்பித்தல் முறைகள் யாவும் முழுக்க முழுக்க உளவியல் அடிப்படையானவை.

கல்வி உளவியலின் வரம்பு
இப்பிரிவு, மாணக்கரது வளர்ச்சிப் படிநிலைகள், அவை ஒவ்வொன்றிலும் மாணவர்களிடம் காணப்படும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், வளர்ச்சிசார் செயல்கள், ஆளுமைக் கூறுகளை வெளிப்படுத்திடும் மாணக்கரது வெளிப்படையான நடத்தைகள், ஆழ்மனத்தினால் இயக்கப்படும் பல்வேறு நடத்தைகள் போன்றவற்றை உள்ளடக்குகிறது. கறற் ல் அனுபவங்கள் மாணக்கரது பல்வேறு வளர்ச்சிப் படிநிலைகளில் ஒவ்வொன்றிற்கும் ஏற்ற கற்றல் அனுபவங்கள் எவை என்பதைத் தீர்மானிப்பதில் கல்வி உளவியல் உதவுகிறது. இப்பிரிவில் மாணவர்களுக்கு அளித்திடுவதற்குரிய பொருத்தமான கற்றல் அனுபவங்களைத் தேர்ந்தெடுக்க உதவிடும் உளவியல் கோட்பாடுகள், கொள்கைகள் ஆகியவை இடம் பெறுகின்றன.

கற்கும் முறைகள்
கற்போரின் இயல்புகளைத் தெரிந்து கொண்டு அவற்றிற்கு ஏற்றவாறு அளித்திட வேண்டிய கற்றல் அனுபவங்களைத் தீர்மானித்த பின், அவ்வனுபவங்களை மாணவர்கள் எளிதில் அடைந்திடுவதற்கான வழிமுறைகளைத் தேர்வு செய்ய வேண்டும். இப்பணியில் கற்றல் எவ்வாறு நிகழ்கிறது, கற்றலைப் பாதிக்கும் காரணிகள் எவை, கற்றல் தொடர்பான கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் என்னென்ன உள்ளன என்பதை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இப்பிரிவில் இடம் பெறும் பாடப்பொருட்களில் மறத்தல், நினைவிலிருந்தல் (Remembering) கற்றல் - மாற்றம், பொதுமைக் கருத்துகள் உருவாகும் முறை, சிந்தித்தல், ஆராய்ந்தறிதல், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற அறிவு சார்ந்த செயல்பாடுகள் ஆகியனவும் இடம் பெறுகின்றன. கற்றல் என்னும் செயல்பாட்டினில் இடம் பெரும் இரு முக்கியக் கூறுகளான, கற்பவர், கற்பிப்பவர் இவர்களுக்கிடையே
வருபவை கற்றல் சூழ்நிலை, கற்கும் முறைகள், கற்கும் சூழ்நிலைகள் என்னும் பிரிவினில் வகுப்பறைச் சூழல் குழு இயக்கவியல், கவன ஈர்ப்புக் காரணிகள், கவனக் குறைவிற்கான காரணங்கள், கற்றலுக்கு உதவும் வலுவூட்டிகள், கற்றலை மதிப்பிடும் வழிமுறைகள், வழிகாட்டுதல் மற்றும் அறிவுரை பகர்தல் போன்ற கற்றல் செயல்பாட்டினில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

ஆசிரியர்
கற்கும் சூழ்நிலையில் ஆசிரியரும் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறார். ஆசிரியரது ஊக்கம், மனப்போராட்டங்கள், செயல்திறன்கள், மனப்பான்மை, மனநலம், தொழில்முறை வளர்ச்சி ஆகியனவும் கல்வி உளவியலின் வரம்புக்குள் அடங்குகின்றன. சிறந்த செயல்திறன் மிக்க ஆசிரியரின் ஆளுமைப் பண்புகள், ஆர்வங்கள், நாட்டங்கள், கற்பிக்கும் திறன்கள் ஆகியவற்றைப் பற்றி அறிவதன் மூலம், திறமையான ஆசிரியர்கள் உருவாகின்றனர். கீழ்க்கண்டவற்றை கல்வி உளவியலின் உட்பிரிவுகளாக குறிப்பிடுகின்றனர். அவைகள்:

குழந்தையும் அதன் வளர்ச்சியும்
குழந்தையின் உடல், மன, சமூக வளர்ச்சிகளும், கற்றலில் அவற்றின் தாக்கங்களும், (உ-ம்) குழந்தையின் மொழி வளர்ச்சி, சிந்தனை வளர்ச்சி, சமூக நெறிப்படுத்தும் முறைகள் ஆகியவை அக்குழந்தையின் கற்கும் திறனை வெகுவாகப் பாதிக்கின்றன.

கற்கும், கற்பிக்கும் முறைகள்
ஊக்கம், கற்கும் திறன், கற்பிக்கும் முறை, ஆளுமையை வளர்த்திடும் வழிமுறை, நுண்ணறிவை அளந்திடும் முறை, மாணவரது நுண்ணறிவு நிலைக்கேற்ப - கற்பித்தல் முறைகளைத் தேர்ந்தெடுத்தல், நினைவாற்றலைப் பாதிப்பவை, மறுப்பதற்கான (அல்லது) எதிர்ப்பதற்கான காரணங்கள் - போன்றவை இப்பிரிவில் அடங்கும்.

மாணாக்கரது வளர்ச்சியை மதிப்பிடுதல்
மாணக்கரை மதிப்பிடும் முறைகள், தனியொரு மாணவனை ஆய்வு செய்து பிரச்சனைகளுக்கான தீர்வைக் கண்டறிதல், கற்றல் குறைபாடுகளைக் கண்டறிந்து சரி செய்தல், வெவ்வேறு கற்பித்தல்
முறைகளின் திறன்களையும் பயன்களையும் கணித்தல் போன்றவை இப்பிரிவின் கீழ் வரும்.

கல்வி உளவியலின் முக்கியத்துவம்

 மாணவர்களிடையே காணப்படும் பல்வேறு நிகழ்வுக்கூறு வேறுபாடுகளையும், அவற்றிற்கேற்ப மாணவரது தேவையை நிறைவு செய்யும் வண்ணம் கற்பித்தல் முறைகளை தேர்ந்தெடுக்கவும் ஆசிரியருக்கு, கல்வி உளவியல் துணை புரிகிறது.
 மாணவர் கற்றலில் சிறந்து விளங்க ஆசிரியர் கற்றல் கோட்பாடுகளையும், பல்வேறு கற்றல் வழிமுறைகளையும், அவற்றின் நிறை - குறைகளையும், கற்றலில் எதிர்படும் குறைகளையும், அவற்றை நீக்கும் வழிகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்
 மாணவர்களது பொறுப்பற்ற நடத்தையைக் கண்டறிந்து, அதற்கான அடிப்படைக் காரணங்களை, இனம் கண்டு, நீக்கி - ஆசிரியர் மாணாக்கர்களுடைய ஆளுமை வளர்ச்சியைச் செம்மைப்படுத்த, கல்வி உளவியல் உதவுகிறது
 வகுப்பறை ஒழுங்கை நிலை நாட்டவும், மாணவர்களது மனநலத்தை மேம்படுத்தவும், மாணவர்கள் தங்களது பிரச்சனைக்குத் தீர்வு காண வழிகாட்டவும், அறிவுரை பகிரவும், கல்வி உளவியல் ஆசிரியர்க்குப் பயன்படுகிறது
 மாணவர்களது வளர்ச்சி நிலைகளுக்கேற்பவும், அந்தந்த வளர்ச்சி நிலையிலுள்ள மாணவர்களின் கற்றல் போக்குகளுக்கேற்பவும், சமுகத் தேவைகளின் மாறுதல்களுக்கேற்பவும், பாடப்பொருளைத் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தவும் கல்வி உளவியல் ஆசிரியருக்கு உதவுகிறது
 மாணவரின் கல்வி அடைவை மதிப்பிட உளவியல் அடிப்படையிலான பல்வேறு சோதனைகளை செயல்படுத்தி அளவீடுகளைப் பெற்று பொருள் உணர ஆசிரியருக்கு கல்வி உளவியல் அறிவு பெரிதும் துணை புரிகிறது.
 மாணவர்களது மனப்பான்மைகளைச் சீர்படுத்தவும், குழு நடத்தையின் மூலம் மாணவர்களது நடத்தையை மேம்படுத்தி ஆளுமை வளர்ச்சிக்கு திட்டமிடும் வண்ணம், பல்வேறு பாடத் துணைச் செயல்கள் அமைத்திடவும் கல்வி உளவியல் வகுப்பறை ஆசிரியருக்குப் பெரிதும் துணை புரிகிறது.
 வகுப்பறைக் கற்பித்தலில் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்திடும் வழிமுறைகளையும், மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் அக, புற - காரணிகளை அறிந்து அவற்றை பயன்படுத்தியும், கவனக்குறைவுக் காரணிகளை அறிந்து அவற்றை அகற்றியும்
மாணவர்களது கவனத்தை பாடத்தில் நிலைநிறுத்தும் வழிமுறைகளை ஆசிரியர் அறிந்திருந்தால் மட்டுமே ஆசிரியர் தனது வகுப்பறைக் கற்பித்தலில் திறன் மிக்க ஆசிரியராகத் திகழ முடியும்
 மாணவர்களது நாட்டங்களை அறிந்து ஊக்குவிக்கவும், பரிசு, பாராட்டு, தண்டனைகளை முறையாகச் செயல்படுத்தி விரும்பத் தக்க கற்றலை மட்டும் வலுப்படுத்தும் வழிமுறைகளை ஆசிரியர் மேலும் அறிந்திருப்பார் என்றால், அவர் எல்லோராலும் பாராட்டப்படும் ஆசிரியராகத் திகழ்வார். எனவே சிறந்த ஆசிரியருக்குப் பாடப் பொருளின் தேர்ச்சியோடு, அதை
 மாணவர்களுக்கு முழுமையாக சேர்ப்பிக்க பொருத்தமான கற்பித்தல் முறைகளைக் கையாளும் திறன் பெற்றிருக்கவும் வேண்டும். இதற்குக் கல்வி உளவியல் பெரிதும் துணை புரிகிறது.

Post a Comment

0 Comments