கல்வி உளவியல் அடிப்படைகள் | யூரி புரொன்பென்பிரென்னரின் (Uri Bronfenbrenner 1917 - 2005) | வினா விடை


புரொன்பென்புருணரால் (Bronfenbrenner) முன்வைக்கப்பட்ட ஒரு தனியாளின் சூழல் தொகுதிகள் ஐந்தினதும் (05) பிரதான அம்சங்களை விளக்குக.

யூரி புரொன்பென்பிரென்னரின் (Uri Bronfenbrenner 1917 - 2005) குழந்தை வளர்ச்சி பற்றிய அணுகுமுறையானது, இத்துறையில் முதன்மை நிலையை அடைந்துள்ளது என்று கூறலாம். ஏனெனில் அது குழந்தையின் விருத்தியில், சூழ்நிலையின் தாக்கம் பற்றி புதுமையான விளக்கத்தைத் தருகின்றுது. சூழலியல் அமைப்புக் கோட்பாடு, குழந்தை சுற்றுச்சூழலில் உள்ள சிக்கலான தொடர்புகளினால் பாதிக்கப்பட்டு வளர்வதாக கருதுகிறது. புரொன்பென்பிரென்னர், சுற்றுச்சூழல் என்பது ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட, சிக்கலான செயல்படும் அமைப்பு என கருதுகிறார். இவற்றுள் வீடு, பாடசாலை, குழந்தை அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சுற்றியுள்ள மக்கள், தவிர மற்ற அம்சங்கள் அடங்கியுள்ளன. சூழ்நிலையில், ஒவ்வொறு நிலையும் மற்றவறுடன் இணைந்து வளர்ச்சியை வெகுவாக பாதிக்கின்றது. சுற்றுச்சூழல் அமைப்புக் கோட்பாட்டின்படி, நாம் வாழ்க்கை முழுவதும் எதிர்கொள்ளும் மாறுபட்ட சூழல்கள், நம் நடத்தையை பல நிலைகளில் பாதிக்கின்றன. இவற்றை கீழ் வரும் படம் மூலம் விளங்;கிக் கொண்டு புரொன்பென்பிரென்னரினால் முன்வைக்கப்பட்ட ஐந்து சூழல் தொகுதிகள். ஒரு தனியாளிள்; விருத்தியில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன என்று ஒவ்வொன்றாகப் பார்போம்.


1. நுண் அமைப்பு: சூழல்தொகுதி அமைப்பில் உள் பகுதியில் இந்த நுண் அமைப்பு குழந்தையின் நேரடி சூழலில் நடைபெறும் செயல்கள், தொடர்பு முறைகள் ஆகியவற்றைக் கொண்டது. நம் வாழ்வில் நம்மைச் சுற்றியுள்ள நேரடி சூழல்தான் இது. இந்த அமைப்பில் நம்முடன் நேரடி தொடர்பு உள்ள குடும்பம், நண்பர்கள், சக மாணவர்கள், ஆசிரியர்கள், அருகில் வசிப்பவர்கள் ஆகியோர் அடங்குவர். இதில் உள்ளவர்களோடு நாம் நேரடியாக தொடர்புகொள்கிறோம். இக்கோட்பாட்டின்படி, நாம் மற்றவர்களுடன் பழகும்போது வெறும் அனுபவங்களை பெறுவர் மட்டுமல்ல, நாமும் அந்த சூழலை உருவாக்குவதில் பங்கு கொள்கிறோம் என்பதாகும்.

2. இடைநிலை அமைப்பு: இரண்டாவது நிலையில் உள்ள இந்த அமைப்பில் வீடு, பாடசாலை, சுற்றுப்புறத்திலுள்ளோர் இவற்றிக்கிடையே உள்ள தொடர்புகள் அடங்கியுள்ளன. இந்த இடைநிலை அமைப்பில் நம் வாழ்வின் நுண் அமைப்புக்களுக்கிடையே உள்ள தொடர்பு உள்ளடங்கியுள்ளது. இதன் பொருள் நமது குடும்ப அனுபவங்கள், நமது பாடசாலை அனுபத்துடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்பதாகும். உதாரணமாக, பெற்றோரால் ஒதுக்கப்பட்ட ஒரு குழந்தை, தம் ஆசிரியர் பற்றி, ஒரு நல்ல நோக்கத்தை வளர்க்க வாய்ப்பு மிகக் குறைவு, மேலும் இக்குழந்தை, தன் நண்பர்களிடையே பழகும்பேர்து, மதிப்பு குறைவானவராக தன்னை எண்ணி சக மாணவர்களிடமிருந்து விலகிச் செல்ல முடிவு செய்யலாம்.

3. புற அமைப்பு: இந்த சமூக அமைப்பில் குழந்தைகள் இல்லை ஆயினும,; இது குழந்தைகளின் அனுபவங்களை பாதிக்கிறது. இந்த சூழலில், ஒருவர் முயற்சியுடன் செயல்படாமல் இருக்கும் சூழலுக்கும், முயற்சியுடன் செயல்படும் சூழலுக்கும் இடையே தொடர்பு ஏற்படுகிறது. ஒரு குழந்தை, தாயை விட தந்தையின் மீது மிக்க பாசம் கொண்டதாக இருக்கும் போது, அவளின் தந்தை பல மாதங்கள் வெளிநாடுகளில் வேலைக்காக செல்லும் போது குழந்தைக்கும் தாய்க்கும் இடையே உள்ள தொடர்பு சிக்கல் தோன்றலாம். மாறாக, குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு வலுவான உறவு ஏற்படலாம்.

4. பெரு அமைப்பு: புரொன்பென்பிரென்னரின் மாதிரியில், மிக வெளியே உள்ள இந்த நிலையில், கலாச்சார பண்புகள், சட்டங்கள், வழக்கங்கள், வளங்கள் ஆகியவைகள் அடங்கும.; இது அந்த நபரின் கலாச்சாரத்தைக் குறிக்கிறது. இதில் ஒருவரின் அல்லது குடும்பத்தின் சமூக பொருளாதார அந்தஸ்து, அவருடைய இனம், அவர் வசிக்கும் நாட்டின் வளர்ச்சி நிலை ஆகியவை அடங்கும.; உதாரணமாக ஏழை குடும்பத்தில் பிறந்தால் தினமும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்

5. கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள்: இதில் ஒருவர் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் (Transitions), ஒருவரின் ஆயுளில் மாற்றம் (Shifts in one’s lifespan) ஆகியன அடங்கும். ஒருவரின் நடத்தையை பாதிக்கும் சமூக பொருளாதார தாக்கங்கள் இதில் அடங்கும். இதற்கு தெளிவான உதாரணம், விவாகரத்து (Divorce). இது வாழ்வின் ஒரு முக்கிய மாற்றம் ஆகும். இது தம்பதிகளின் உறவினை மட்டுமன்றி குழந்தைகளின் நடத்தையையும் பாதிக்கின்றது.

சுற்றுச் சூழல் அமைப்பு கோட்பாட்டின் சுற்றுச் சூழல் அம்சங்களானது பிள்ளை விருத்தி, வளர்ச்சி நிலைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை வலியுறுத்துகிறது. குறிப்பாக குடும்பத்திலும் அதன் நேரடி சூழலிலும் ஏற்படும் உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்பதை புரூணர் வலியுறுத்துகிறார். ஆசிரியர்கள், உடன் பிறப்புகள், விரிவுபட்ட குடும்பம், வேலை மேற்பார்வையாளர்கள், சட்டம் இயற்றுவோர் ஆகியோர் கொடுக்கும் சமூகப்பண்புகள், குழந்தைகளின் நேர்மறை வளர்ச்சியில் செல்வாக்கு வாய்ந்ததாக திகழ்கின்றன. குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கிற்கு பாரிய முக்கி;யத்துவம் காணப்படுகின்றது என்பதில் ஐயமில்லை, மேலும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள், சட்டதிட்டங்கள், கலாச்சாரங்கள் என்பவற்றிற்றும் தகுந்த மதிப்பு அளிக்கப்பட வேண்டும்.

விருத்தி தொடர்பான புரொன்பென்புருணரின் சூழல் தொகுதி கொள்கையின் சகல சூழல் தொகுதிகளையும் பயன்படுத்தி மாணவரின் விருத்திக்கு ஒரு ஆசிரியர் எவ்வளவு தூரம் வசதியளிக்க முடியும் என்பதை பொருத்தமான உதாரணங்களை முன்வைத்து பரிசீலிக்குக.

புரொன்பென்புரூணரின் சூழல் தொகுதி கொள்கையின் அனைத்து படிநிலைகளிலும் சமூகத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்கள் மூலம் பெறப்படும் அனுபவங்களினூடான அடிப்படையில் தான் பிள்ளையின் விருத்தி தங்கியுள்ளது என்று கூறுகின்றார். மேலும் ஆசிரியர் என்ற வகிபாகம் சமூகத்தில்; கீழ் மட்டம் தொடக்கம் மேல் மட்டம் வரை பெரிதும் தாக்கம் செலுத்தும் ஒன்றாக காணப்படுகின்றது. ஆகவே இதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர் விருத்திக்கு போதியளவு வசதியளிக்க முடியும் என்பதை பின்வரும் உதாரணங்கள் மூலம் பரிசீலிப்போம்.

  • தங்கள் மாணவர்களின் குடும்பங்களின் பின்னணி மற்றும் வாழும் சூழ்நிலைகளை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்: இதன் மூலம் ஆசிரியர்கள் பிள்ளைகளின் வெவ்வேறுபட்ட பின்னணி, அவர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்கள், அவர்கள் நம்பும் விடயங்கள் என்பவற்றை அடையாளம் காண்பதினூடக அவர்களுக்கு ஏற்றவாறு கற்பித்தல் மற்றும் மேலதிக செயற்பாடுகளில் ஈடுபடுத்த முடியும். வகுப்பறையில் காணப்படும் மாணவர்கள் பல்வேறு வகையான குடும்;பப் பின்னணி, மற்றும் சமூக சுற்றுச் சூழலில் உள்ளவர்களாக காணப்படுவர். எனவே சூழல் தொகுதிக் கோட்பாட்டின் நுண் அமைப்பினை அறிந்து ஆசிரியர் மாணவர்களுக்கு ஏற்றாற்போல கற்றல் - கற்பித்தல் செயன்முறைகளைத் தயார்படுத்துவதன்மூலம் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த முடியும்.
  • சூழல் தொகுதிக் கோட்பாடு போன்ற உளவியல் மற்றும் கல்விக் கோட்பாடுகள் ஆரம்பக் கல்விப் பாடத்திட்டங்கள் மற்றும் நடைமுறைகளுடன் இணைக்கப் பயன்படுத்தப்படுகிறது: இங்கு மாணவர்கள் பாடசாலை சூழலில் நடத்தை மாற்றங்களை அவதானித்து ஆசிரியர் அதற்கு ஏற்றால் போல் திட்டமிடல்களை மேற்கொண்டு திறம்பட கல்வியை போதிக்க முடியுமாக இருக்கும்.
  • பெற்றோர்களுடன் நல்ல உறவைப் பேணுவதன் மூலம் பிள்ளை வீட்டுச் சூழலில் எவ்வாறு வழிநடாத்தப்பட வேண்டும் என்ற அறிவுறைகளை வழங்குவன் மூலமும் நல்லொழுக்கும் உள்ள பிரசைகளை சமூகத்தில் உருவாக்கலாம்.
  • ஆசியர்கள் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்;ட மாணவர்களை கல்வியை விளையாட்டினூடாக வழங்கும்போது அவர்கள் கல்வியிலும் மிளிர வாய்ப்பாக அமையும்.

மேலே முன்வைக்கப்பட்ட சில உதாணங்களினூடாக பார்க்கும்போது புரொன்பென்புரூணரின் சூழல் தொகுதி கொள்கையின் ஐந்து பிரதான அம்சங்களிலும் ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் பிள்ளையின் விருத்தியில் கணிசமானளவு வசதியளிக்கும்போது கல்வி மாத்திரமின்றி அணைத்துவிமான உலக சாவால்களை வெற்றி கொள்ளக்கூடிய எதிர்கால சந்ததியினரை உருவாக்க முடியும் என்பதில் ஐயமில்லை.

MNSM. Yoosuf  B.Sc. in MIT (SEUSL), PGDE (MERIT) NIE, M.Ed. (R) OUSL

BT/BC/KAWATHAMUNAI AL AMEEN MAHA VID.

Post a Comment

0 Comments