மனவெழுச்சி என்பது உணர்ச்சி (மகிழ்ச்சி, அன்பு, கோபம், களிப்பு, துயரம்) என்பதிலும் வேறுபாடானது. இது தூண்டல்களால் தூண்டப்படுகின்ற மனநிலையாகும் என ஸ்கின்னர் போன்ற நடத்தைவாதிகள் குறிப்பிடுகின்றனர். மனவெழுச்சியிலே உணர்ச்சிகளும் உடலியற் தாக்கங்களும் அடங்கியுள்ளன. எனவே மனவெழுச்சிக்கும் பிள்ளை வளர்ச்சிக்கும் நெருங்கிய தாக்க விளைவுகள் காணப்படுவதுடன் ஆளுக்காள் வேறுபடத்தக்கதுமாகும். இவ்விடயங்களை பார்க்கும் பொழுது பிள்ளை விருத்தியில் மனவெழுச்சி முக்கிய இடத்தை பெறுகின்றது எனலாம்.
மனவெழுச்சி மனிதனுக்கு எந்த வயதிலும் அவசியமான உயிரியல் தேவை எனலாம். பொருத்தமற்ற மனவெழுச்சிகளைக் கட்டுப்படுத்தி அவற்றை பொருத்தமான முறையில் வெளிப்படுத்தலே மனவெழுச்சி வளர்ச்சி எனக் கூறுதல் வேண்டும். இத்தகைய மனவெழுச்சிகளை இரு பிரிவுகளாக வகுக்கலாம்
பாதுகாப்பு சார் மனவெழுச்சிகள் : உடன்பாடான ஆக்கபூர்வமான மனவெழுச்சிகள் பாதுகாப்புசார் மனவெழுச்சிகளாகக் கொள்ளப்படுகின்றன.
அழிவு சார் மனவெழுச்சிகள் : பயம், அச்சம், பதகளிப்பு. கோபம் போன்றன அழிவுசார் மனவெழுச்சிகளாகக் காட்டப்படுவதுடன் எதிர்மறைத் தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றன. இத்தகைய மனவெழுச்சிகள் நன்னெறிப்படுத்தப்பட வேண்டியவையாகும். இது கல்விச் செயன்முறையில் எந்நிலையிலும் அடைய வேண்டிய ஓர் இலக்காகும்.
எனது வகுப்பறையில் இரண்டு மாணவரகளில் வெளிப்படுத்தும் அழிவு சார் மனவெளிச்சிசார் பிரச்சினை சமகால நோக்குகளுக்கமைவாக கீழ்வருமாறு வரையறை செய்கிறேன்.
1. அதிக கோபம் (மாணவன் A) : வகுப்பறையில் இம் மாணவன் ஏனைய மாணவர்களுடன் கருத்து முரண்பாடு, சண்டையிடுதல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளின் பொழுது சக மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துத்துதல் அதாவது கவனக்களைப்பானாக செயற்படுகின்றான். வகுப்பாரிசியர் என்ற ரீதியில் இம் மாணவன் தொடர்பாக நாளாந்தம் அதிக முறைப்பாடுகள் மாணவர் சார்பாகவும் மற்றும் பாட ஆசிரியர் சார்பாகவும் கடைத்தன. இதன் ஊடாக அதிக கோபமான மனவெழுச்சி செயற்பாடுகள் இப்பிரச்சினைக்கான காரணம் என வரையறை செய்ய முடியும்.
2. தயக்க உணர்வு (மாணவன் B) : இம் மாணவன் வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் புறக்கீர்த்திய செயற்பாடுகளில் தானாக முன்வந்து கழுந்துகொள்வதில் தயக்கம் கொள்கின்றான். உதாரணமாக பாட ஆசிரியர் என்ற வகையில் குறித்த மாணவனுக்கு நன்றாக வாசிக்க முடியும் என்பது என்குத் தெரியும் ஆனால் மணவர்களுக்கு முன் இம்மாணவனை எழுந்து வாசிக்க பணிக்கும்போது முன்வந்து வாசிப்பதற்கு தயக்கம் கொள்கின்றான். இச்செயற்பாட்டை அவதானிக்கும்போது தயக்கத்துடனான வெக்க மனவெழுச்சி இப்பிரச்சினைக்கு காரணம் என வரையறை செய்ய முடியும்.
மனித நிலைப்பாட்டில் உணர்வுகளும் மனவெழுச்சிகளும் பிரிக்க முடியாத இரு அம்சங்களாகும். இந்த வகையில் பிள்ளைப் பருவத்தில் ஏற்படும் மனவெழுச்சியை விளக்குதல் கடினமான செயலென உளவியலாளர்கள் குறிப்படுகின்றனர். இதற்குக் காரணம் பெரும்பாலான பிள்ளைகளின் மனவெழுச்சி வளர்ச்சி வெவ்வேறு விதமாக வளர்வதனாலாகும்.
அம்மனவெழுச்சிசார் பிரச்சினைகளை இழிவளவாக்குவதற்குகாக வேறுபட்ட இரண்டு (02) தலையீட்டுத் திட்டங்களை வடிவமைக்குக.
A மாணவனுக்கான தலையீட்டுத் திட்டம்
மேலே தயாரிக்கப்பட்ட தலையீட்டுத்திட்டங்களில் உள்ள ஒவ்வொறு செயற்பாடுகளையும் படிமுறையாக நடைமுறைப்படுத்தி, அதன் இறுதிப் பெறுபேறு நன்றாக அமையவில்லை எனின் குறித்த செயற்பாட்டினை மீழ் வடிமைக்க அல்லது மிள்திட்டமிட வேண்டி ஏற்படும். இவ்வாறு எல்லா செயற்பாடுகளும் முழுமையாக இடம்பெறும்போது இறுதியில் ஆசிரியாரல் ஏற்கனவே உத்தேசித்த இலக்குகள், இலக்கு மாணவர்களில் எவ்வாறான மனவெழுச்சி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்ற முடிவுக்கு வர முடியும்.
- உளவளத்துனை மற்றும் வழிகாட்டல் ஆலோனைத் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆசியர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று அவற்றை தொடர்சியாக இலக்கு மாணவர்களில் பிரயோகிக்கும்போது அவர்களை உடன்பாட்டு தன்மைக்கு கொண்டு வர முடியுமாக இருக்கும் மேலும் ஆசிரியரின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதும் இலகு.
- பாடசாலை அதிபரின் அனுமதியுடன் மேலதிக வகுப்புக்கள், போட்டி நிகழ்ச்சிகள், வியையாட்டுப் பயிற்றுவிப்புக்கள் என்று வகுப்பு மாணவர்களுக்கு கூறி அனைவரையும் மாலை நேரங்களில் பயன்படுத்துவதினூடாக தலையீட்டுத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு போதுமான நேரத்தை ஒதிக்கிக் கொள்ள முடியும்.
- இலக்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கு இப்பிரச்சினையால் கல்வியில் ஏற்படும் எதிர்கால தாக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்குவதின் மூலம் பெற்றோரின் சம்மதத்தை பெற்றுக் கொள்வது இயலுமாக இருக்கும்.
MNSM. Yoosuf B.Sc. in MIT (SEUSL), PGDE (MERIT) NIE, M.Ed. OUSL
BT/BC/KAWATHAMUNAI AL AMEEN MAHA VID.
0 Comments