விழுமியக் கல்வி தொடர்பான வினாக்களும் விடைகளும்

ஒழுக்க நடத்தையில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் 

ஒழுக்க நடத்தையில் நேர் மற்றும் எதிர்மறையான இரண்டு விடயங்கள் காணப்படுகிறது. அதாவது ஒழுக்கமானது நல்லொழுக்கம், தீய ஒழுக்கம் என்று வகைப்படுத்தலாம். ஒழுக்க நடத்தையில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளை பின்வருமாறு குறிப்பிடலாம் 

பெற்றோர் : குழந்தைகளிடம் சீரிய விழுமியங்களை வளரச் செய்வதில் ஆசிரியர்களைப் போன்றே பெற்றோர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் ஆசிரியர்களை விட பெற்றோர்களுக்கே அதிகக் கடமைப் பொறுப்புள்ளது. சிறு வயதிலேயே குழந்தைகளின் மனதில் விழுமிய உணர்வுகளை விதைப்பவர்கள் பெற்றோர்களே

ஆசிரியர்கள் : பெற்றோர்களுக்கு எந்த அளவிற்கு குழந்தைகளின் விழுமிய உணர்வுகளைக் கற்பிக்க பங்கு இருக்கின்றதோ, அதைவிட அதிகமான பொறுப்பு பள்ளிக்கும்இ ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் உண்டு. பிள்ளைகளிடையே விழுமிய உணர்வுகளை வளர்ப்பதில் பள்ளிக்கு முக்கிய பங்கு உள்ளது. இன்றைய இளம் சமுதாயத்தினர் நாளைய குடிமக்களாவதால், நம் நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் முதலியவற்றைக் கற்பிப்பதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. கல்வி அமைப்பானது பாடங்களைக் கற்பிப்பதற்கு மட்டுமின்றி நல்லதொரு நடத்தைக்கு வித்திடுவதாகவும் இருக்க வேண்டும்.

சமயம் : நாட்டில் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். தங்களுடைய பிள்ளைகளுக்கு இளம் வயதிலிருந்தே சமயங்கள் பற்றியும், தாம் வழிபடுகின்ற இறைவன், பின்பற்றுகின்ற இறைநெறிகள், வழிபாடுகளைப் பற்றியும் பெற்றோர்கள் கற்றுத் தருகின்றனர். இதனால் அவர்களிடம் இறை நம்பிக்கையும், சமய மதிப்புணர்வும் ஏற்படுகின்றன. அவ்வாறு பெற்றோர் சமயத்தினைப் பற்றிக் கற்றுத் தரும் போது பிற சமயங்களையும் மதிக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும்.

சமவயதுக் குழுக்கள் : கல்வி உளவியல் அறிஞர்களின் கருத்தின்படி ஒருவருடைய நடத்தைக்கும், அவரைச் சேர்ந்த நண்பர்களின் தாக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மேலும் இதனை ‘புவோடு சேர்ந்த நாரும் மணக்கும்’, ‘உன் நண்பனைக் கூறு, உன்னைப் பற்றிக் கூறுகிறேன்’ போன்ற பழமொழிகள் உறுதிப்படுத்தும். குழந்தைப் பருவத்திலிருந்தே நண்பர்களின் சேர்க்கை ஒருவருடைய நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்குகிறது. அவர்களுடைய எண்ணம், குணம், செயல்பாடு முதயலிவை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஒருவருடைய மனத்தில் மாறுதல்களைக் கொண்டு வருகின்றன. இதனால் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் குழந்தைப் பருவத்திலிருந்தே யாருடன் பழகுகின்றனர் என்பதனில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

தொடர்பு சாதனங்கள் : மக்கள் தொடர்பு சாதனங்களான வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள், பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாளிகள், கைபேசிகள் மற்றும் கணினி மற்றும் இணையதளம் போன்றவை மனித விழுமிய உணர்வுகளைப் பெரிதும் பாதிக்கின்றன. மக்கள் தொடர்பு சாதனங்களின் முக்கிய பணிகள் மக்களுக்கு அன்றாட தகவல்களை அளிப்பது, பொழுது போக்கிற்குப் பயன்படுவது, விளம்பரங்களின் வழியே வர்த்தக வளர்ச்சிக்குப் பயன்படுவது என்றாலும், விழுமிய உணர்வுகளுக்கும் இவற்றின் பயன்பாட்டிற்கும் மறைமுகமாகப் பெருந்தொடர்பு உள்ளது.

தான் வாழும் சமூகம் : மாணவர்கள் சமூகத்தின் மூலமாகவும், மதிப்புணர்வுகளைக் கற்றுக் கொள்கின்றனர். சமூகம் என்பது நாமும், நம்மைச் சுற்றி உள்ள மக்களே ஆகும். சமூகத்தினுடைய பழக்க வழங்கங்கள், வாழிடம், பண்பாட்டினைப் பொறுத்து மனித விழுமிய உணர்வுகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன.

அரசாங்கம் : அரசாங்கமானது, நவீன விழுமியங்களான ஜனநாயகம், சமத்துவம், சமயத்துவம், நீதி, சுதந்திரம், முற்போக்கு சிந்தனைக்கு வித்திடும் வகையில் செயல்பட்டு வருகிறது. மக்கள் ஆட்சியில் அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்படும் வகையில் அரசாங்கம் பல செயல் திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி உள்ளது. அவை மனித மதிப்புணர்வுகள், உரிமைகளுக்கு வழிகோலுவனவாக உள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட காரணிகள் மனித உயிரின் நல்லொழுக்க, தீய ஒழுக்க நடத்தைகளில் செல்வாக்கு செலுத்துகின்றன. மனித உயிரிக்கு நேர் விடயங்கள் கிடைக்கப்பெற்று அதன்படி ஒழுகும்போது நல்லொழுக்க நடத்தை மாற்றங்கள் இயல்பாக கடத்தப்படும் இவற்றுக்கு மாற்றமாக காணப்படின் தீய ஒழுக்க நடத்தைகள் வெளிக்காட்டப்படும். எனவே மனித உயிரிக்கு சிறுவயதிலிருந்து நல்ல விடயங்கள் எது? , தீய விடயங்கள் எது? என அவர்களது வயது மட்டத்திற்கு எற்றவாறு பகுத்தறிவின் உதவியோடு பொருத்தபாடு அடையச்செய்தால் நல்லொழுக்க நடத்தைகள் வெளிப்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை. 

இலங்கை பாடசாலைகளில் விழுமியப் பண்புகளில் வீழ்ச்சி ஏற்பட வழிவகுக்கும் காரணிகள்

ஒழுக்க விழுமியமிக்க ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவது என்பது சவாலாக மாறிவிட்டது. ஏனெனில,; சிறுவர்கள் முதல் வளர்ந்தவர்கள் வரை  தொலைக்காட்சி , வானொலி ,கைடக்கத் தொலைபேசியை, சமூக வலைத்தளப் பயன்பாடு என்பவற்றுக்கு அடிமைப்பட்டு வருகின்றனர். இதனால், குறிப்பாக சிறுவர்கள் மற்றும் வளர்ந்தவர்களிடையே விழுயமிக்க மனிதப் பண்புகள் அகன்று செல்லும் நிலையில் வக்கிர எண்ணங்கள் அதிகரித்து அவ்வெண்ணங்கள் செயல்வடிவில் வெளிப்படுத்தப்படும் அங்கீகரிக்க முடியாத பல சம்வங்கள் அண்மைக்காலமாக இடம்பெற்று வருவதைக் காணமுடிகிறது.

சமூக வலைத்தள பாவனை, தொழிநுட்ப வளர்ச்சி.

பல சிறுவர்கள் காட்டூன் பார்ப்பதிலும் 'விடியோ கேம்' விளையாடுவதிலும் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். அதேபோன்று, கட்டிளமைப் பருவத்தினர் பலர் கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டிலும் 'பேஷ்புக்', 'வட்ஸ்சப்' போன்ற சமூக வலைத்தளப் பாவனையிலும் அதிக காலத்தைச் செலவிடுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் பல்வேறு சாதக மற்றும் பாதக நிலைகளை பயன்பாட்டாளர்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறது

தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியின் ஒருபக்கம் மனித சமுதாயத்திற்கு நலமாக அமைகின்றபோதிலும.;; அதன் மறு பக்கம் பாதகமாகவும் அமைந்துவிடுகிறது. எந்தவொரு விடயமும் அதன் அளவை மீறிச் செல்கின்றபோது ஆரோக்கியமற்ற நிலையையே தோற்றுவிக்கும்.

தொடர்ந்து 12 மணி நேரம் விடியோ கேம் விளையாடுவது நண்பர்களையும், குடும்பத்தினரையும் எரிச்சலடையச் செய்வதுடன் மனநல பாதிப்புக்களையும் ஏற்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ள உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச நோயியல் வகைப்படுத்தலில் விடியோ கேம் விளையாட்டையும் உளவயில் பாதிப்பாக பிரகடனப்படுத்தியிருப்பது எதுவும் அளவுக்குச் மிஞ்சினால்  நஞ்சாகும் என்பதை வெளிப்படுத்தியிருப்பதோடு வழிகாட்டலின் பலவீனத்தையும், விழுமியங்களிலிருந்து சிறுவர்களும் வளர்ந்தவர்களும் விலகி வருவதையும் எடுத்துக்காட்டுவதாகவே கருத வேண்டியுள்ளது.

 • கட்டிளமைப் பருவத்தினரின் மிதமிஞ்சிய செயற்பாடு

சிறுவர்களினதும், கட்டிளமைப்பருவத்தினரதும் மிதமிஞ்சிய செயற்பாடுகள் அளவு கடந்து செல்லாது தவிர்க்கப்பட வேண்டுமாயின் அவர்கள் ஆரோக்கியமான வழிகாட்டல்களுடன், விழுமியப் பண்புகளுடனும் வளர்க்கப்படுவது அவசிமாகவுள்ளது. ஏனெனில், நாகரீகம் என்ற பெயரில் அநாகரீகம் வெகுவாக சமுதாயத்திற்குள் ஊடுருவி வந்துகொண்டிருக்கின்றன.

இதனால், கலாசாரச் சீரழிவுகள் ஏற்பட்டிருக்கும் இக்கால கட்டத்தில் முறையான வழிகாட்டல்கள் ஆரோக்கியமானதாகவும் பலமானதாகவும் அமைவதோடு பலவீனமடைந்துள்ள விழுமியங்களைக் கட்டியெழுப்புவதற்காக விழுமியக் கல்விக்கான முக்கியத்துவமும் அவசிமாகவுள்ளது.

சமூகமயமாக்கல் முகவர்களின் வழிகாட்டல் இன்மை

ஒரு பிள்ளையின் சிறப்பான வளர்;ச்சியில் சமூக முகவர்களான பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமவயதுக் குழுவினரும், சமய போதகர்களும் அதி முக்கிய பங்கு வகிக்;கின்றனர். சமூக முகவர்களின் வழிகாட்டல்கள் பலவீனமடைகின்றபோது, பிள்ளைகளின் விழுமியப் பண்புசார் வளர்ப்பும், வளர்ச்சியும் திசைமாறுவதுடன் எதிர்பாராத விபரீதங்களையும், மரணங்களையும் கூட ஏற்படுத்தி விடுகிறது.

அந்நிய கலாச்சாரம்

தங்களுக்குச் சாதகமான சூழல் அமைகின்றபோது சிறுவர்களும், கட்டிளமைப்பருவத்தினரும் விழுமியங்களுக்கு அப்பால் சென்று வழிகாட்டல்களை மிஞ்சிய செயற்பாட்டை பரீட்சிக்க முற்படுகின்றனர். இதனால், அவர்கள் பல்வேறு விபரீதங்களை எதிர்நோக்குவதுடன் சமூக, பொருளாதார ரீதியிலும் பாதிப்புக்களை ஏற்படுத்துக்கின்றனர். நாகரீகம் என்ற போதைக்குள் விழுந்துள்ள இளம் சமுதாயத்தினர் அதன் விளைவுகளையும் எதிர்நோக்கி வருகின்றனர். அண்மைக்காலமாக இத்தகைய சம்பவங்கள் பரவலாக இடம்பெறுவதைக் காணமுடிகிறது.

பாடசாலையில் வழிகாட்டல் சேவை ஒழுங்குபடுத்தபடாமை

ஆரோக்கியமற்ற சம்பவங்களும் எதிர்பாராத விளைவுகளும் நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், அதில் பங்காளர்களாகவும் பரிதாபத்துக்குரியவர்களாகவும் சில சிறுவர்களும், வளர்ந்தவர்களும் காணப்படுகின்றனர். அண்மையில்  பாடசாலை மாணவர் ஒருவர் சக மாணவர்களினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த மாணவர் உயிர் இழந்துள்ளமையும், இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் நன்னடத்தைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளமையும் வீடு மற்றும் பாடசாலைகளில் காணப்படும் வழிகாட்டலிலுள்ள பலவவீனத்தைப் புடம்போட்டிருப்பதோடு விழுமியக் கல்வியின் அவசியத்தையும் வழியுறுத்தியிருக்கிறது எனக் கருத வேண்டியுள்ளது.காரணமாகிறது என்பதையும் சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

பாடசாலையில் விழுமியக் கல்விக்கு முக்கியத்துவம் வழங்காமை

தனியாட்ககளக்கிடையிலான பிரச்சினை.

சமயக் கல்வியின் வீழ்ச்சி

எனவே மேற்குறிப்பிட்ட விடயங்களின் ஊடாக இலங்கை பாடசாலைகளில் விழுமியப்பண்புகள் வீழ்ச்சி அடைந்து செல்கின்றது என்பதனை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது


பாடசாலைகளில் விழுமியப் பண்புகளை விருத்தி செய்வதில் ஆசிரியர் கொண்டுள்ள வகிபாகம் 

மாணவர்கள் தமது வீட்டுச் சூழலிற்கு அடுத்ததாக அதிகளவு பரிச்சயமான சூழல் பாடசாலை ஆகும். பாடசாலை வயதை அடைந்த பிள்ளைகள் தமது காலங்களை பாடசாலைகளிலும் செலவிடத் தொடங்குகின்றனர். எனவே பாடசாலையில் நேரடியாகவும் நேரில் முறையிலும் பல்வேறு நடத்தைகளை மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.இந்நடத்தைகள் அவர்களின் எதிர்கால வாழ்வு எந்தளவிற்குத் தரமானதாகவும் திறனுள்ளதாகவும் அமையும் என்பதைத் தீர்மானிக்கக் கூடியதாக அமைகின்றது.

பாடசாலையில் மாணவர்கள் தமது முன்மாதிரிகளாக ஆசிரியர்களையே கொண்டு பெரியோர்களைப் பணிந்து சீரிய பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். ஆனால் இன்றைய நவீன தொழிநுட்ப விருத்தி பெற்ற இக்காலத்தில் மாணவர்களின் பண்பாட்டு வீழ்ச்சி அல்லது ஒழுக்க வீழ்ச்சி என்பது மிகப் பெரும் அச்சுறுத்தலாகக் காணப்படுகின்றது. எனவே பாடசாலை மட்டத்தில் மாணவர்களின் விழுமியங்களை விருத்தி செய்யும் பிரதான வகிபங்கு ஆசிரியரை சார்ந்ததாகக் காணப்படுகின்றது.ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளிலும் இதர செயற்பாடுகளின் போதும் அதிகமாக தொடர்பு கொள்ளும் ஒருவர் என்ற அடிப்படையில் அவரின் வகிபாகங்களை பின்வருமாறு நோக்கலாம்.

 பாடசாலை எனும் போது இலவசமாக கல்வியை வழங்கக்கூடிய சுற்றுநிருபங்கள், விதிமுறைகள்,தாபனக் கோவைகள்,நிதிப்பிரமாணங்கள் என்பவற்றிற்கமைய செயற்படக்கூடிய நிறுவனமாகும்.பாடசாலையில் பின்வரும் அடிப்படைகளில் விழுமியக் கல்வியை விருத்தி செய்ய முடியும்.

கலைத்திட்டம்

இணைக் கலைத்திட்டம்

மறைக் கலைத்திட்டம்


கலைத்திட்டம்

    பாடசாலையில் கலைத்திட்டத்தின் ஊடாக கல்வி போதிக்கப்படுகின்றது. தேசிய கல்விக் குறிக்கோள்களை அடைவதே பாடசாலைக் கல்வியின் நோக்கமாகும். தேசிய கல்விக் குறிக்கோள்கள் விழுமியங்களை பறைசாற்றுவதாகவே அமைந்துள்ளன.

1. தேசிய ஒற்றுமை,இணக்கம்,சமாதானம் என்பவற்றை ஏற்படுத்துதல்

2. தேசிய பாரம்பரியத்தின் அதிசிறந்த அம்சங்களை அங்கீகரித்தலும் பேணலும்

3. சமூக நீதியும் ஜனநாயக வாழ்க்கை முறைக நியமங்களும் உள்ளடக்கிய சமூக நீதியை உருவாக்குதல்

4. மனித விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் நிலைபேறுடைய வாழ்க்கைக் கோலத்தை மேம்படுத்தல்

5. சமனிலை ஆளுமைக்குரிய ஆக்க சிந்தனை,தற்றுணிவு,ஆய்ந்து சிந்தித்தல்,பொறுப்பு,வகைகூறல் மற்றும் அம்சங்களை விருத்தி செய்தல்

6. பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிக்கும் மனித வளத்தில் அபிவிருத்தியை மேம்படுத்தல்

7. தனிநபர்களின் வேறுபாட்டிற்கேற்ப இணங்கி வாழவும் மாறிவரும் உலகை சமாளிக்கவும் தகைமைகளை விருத்தி செய்தல்

8. சர்வதேச சமூகத்தில் கௌரவமான இடத்தைப் பெறுவதற்கு பங்களிக்கும் மனப்பாங்குகளையும் திறன்களையும் வளர்த்தல்

தேசிய குறிக்கோள்களை நோக்கினால் பிரதான விடயமாகக் குறிப்பிடப்பட்டிருப்பது விழுமியங்களாகும். எனவே இதனை ஒட்டியதாகவே அடிப்படைத் தேர்ச்சிகள் (07) வகுக்கப்பட்டுள்ளன.

பாடவிடயங்களின் ஊடாக தேர்ச்சிகள் அடையப்பட்டு அதனூடாக தேசிய கல்விக் குறிக்கோள்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.எனவே பாட விடயங்களின் ஊடாக விழுமியங்களை நோக்கி பயணிக்க வைப்பது ஆசிரியர்களின் வகிபாகமாகும்.

ஆசிரியர் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் போது விழுமியங்களைக் கட்டியெழுப்பக்கூடிய விதத்தில் ஈடுபட வேண்டும்.எடுத்துக் காட்டாக தாய்மொழிப் பாட வேளையில் அமைதியாகச் செவிமடுத்தல், இனிமையான மற்றும் கண்ணியமான சொற்பிரயோகம், பண்புடன் கூடிய மொழிப்பாவணை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மாணவர்களின் நடத்தை மேம்பாட்டுக்காக அந்தந்த பாடங்களுக்கே உரித்தான விழுமியங்களை விளங்கிக் கொள்ளக்கூடிய விதத்தில் பாடத்தின் ஊடாக மேலோங்கச் செய்தல் மற்றும் பாட அப்பியாசங்கள், செயற்பாடுகள் மற்றும் ஒப்படைகள் மூலமாக விழுமியக் கல்விக்கு அவகாசமளித்;தல் ஆசிரியரின் வகிபாகமாகும்.

பாட விடயங்களைக் கற்பிக்கும் போது உயர்ந்த மேதைகளின் வாழ்க்கை வரலாறு,  

கல்விமான்கள், வீரர்கள், விஞ்ஞானிகள், சிறந்த தலைவர்கள் போன்றோரின் வாழ்க்கைக் குறிப்பிலிருந்து விழுமிய முன்மாதிரிகளை எடுத்துக் காட்டுவதன் ஊடாக பண்பாட்டில் விழுமியத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது ஆசிரியரின் வகிபாகமாகும்.

நாளாந்தம் வகுப்பிற்குள் பிரவேசித்ததும் மாணவர்களுக்கு சில நிமிடங்கள் நற்சிந்தனை உன்றை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் அளித்தல் மூலமும் வகுப்பறையில் எதிர்பார்க்கப்படும் மாணவர்களின் நடத்தைகளை உள்ளடக்கி ஒழுக்க அட்டவணையைக் காட்சிப்படுத்துதல் மூலமும் வகுப்பறையில் சிறந்த நடத்தையை மாணவரிடையே ஊக்குவிப்பதன் மூலமும் விழுமியத்தை விருத்தி செய்யலாம்.

மாணவர்களின் நடத்தையை பாடசாலைக்கு உள்ளேயும் வெளியேயும் அவதானித்து அவர்களின் நடத்தை மாற்றம், தூய்மை, என்பவற்றிற்குப் பொருத்தமான வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்குதல் வேண்டும்.5ளு முறைமையை கட்டியெழுப்புவதன் ஊடாக புறச் சுத்தம் மற்றும் அதனூடாக அகச்சுத்தம் போன்றன கட்டியெழுப்பப்படுகின்றன.

செய்ரி – வகைப்படுத்தல்

சித்சுகே –நிலைநிறுத்து

செய்கெத்சு ---வரையளவுப்படுத்தல்

செய்சோ ---ஒழுங்குபடுத்தல்

செய்தோன் ----பிரகாசிக்கச் செய்தல்


இணைக்கலைத்திட்டம் என்பது கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்கு புறம்பான செயற்பாடாகும்.விழுமியங்களை ஏற்படுத்தல் தொடர்பாக பாடசாலையில் விளையாட்டுப் போட்டி, கண்காட்சி, குறு நாடகம், வீதி நாடகம், மக்கள் வேலைத்திட்டம், களப் பயணம், பாடசாலை கலை இலக்கிய நிகழ்ச்சிகள், வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பவற்றை ஒழுங்குபடுத்தி பங்கேற்கச் செய்வதன் ஊடாக விழுமியங்களை விருத்தி செய்ய முடியும்.

ஓவ்வொரு தவணையும் விழுமியங்களைக் கட்டியெழுப்புவது தொடர்பாக நேர் சிந்தனைகள், உடல், உள ஆரோக்கியம், வாழ்க்கை வழிகாட்டல்கள், சிவில் சட்டங்கள் போன்ற விழுமியப் பண்புகளை விருத்தி செய்வதற்கு ஏற்ற விடயங்களின் கீழ் அறிஞர்களின் உரை மற்றும் ஆளுமை விருத்திக்கான செயலமர்வுகளை நடாத்துதல் முடியும்.எடுத்துக்காட்டாக பாடசாலைகளில் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் போதைப்பொருள் பாவணைக்கு பெரும்பாலும் அடிமையாக உள்ளனர்.எனவே ஒரு மருத்துவரர் மூலமாக போதைப்பொருள்பாவணை மூலம் ஏற்படக் கூடிய விளைவுகள் மற்றும் தடுத்தல் தொடர்பான உரையை ஆற்றுவதற்கு ஒழுங்கு செய்தல் ஊடாக விழுமியங்களை விருத்தி செய்ய முடியும்.

மறைக் கலைத்திட்ட செயற்பாடுகளின் மூலமாக மாணவரிடம் விழுமியப்பண்புகளை விருத்தி செய்சது ஆசிரியரின் வகிபாகங்களில் ஒன்றாகும்.காலைக் கூட்டங்களின் போது மாதத்திற்கு ஒரு தடவை ஒழுங்கு முறையி;ல் ஓர் ஆசிரியர் அல்லது மாணவர் விழுமியப்பண்புகளின் முக்கியத்துவம் தொடர்பாக உரை ஈற்றுவதற்கு ஒழுங்கு செய்தல் சிறப்பானது.

பாடசாலையில் மாணவர்களின் கண்ணுக்கு அடிக்கடி தென்படக் கூடிய அமைப்பில் விழுமியக் கருத்துக்களை சுமந்த பதாகைகள் மூலம் மாணவர்களின் விழுமியப் பண்புகளைக் கட்டியெழுப்ப முடியும்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற அடிப்படையில் மாணவர்களில் சிறந்த மாற்றத்தைத் தோற்றுவிக்க விழுமியக் கல்வி மூலம் சிறந்த மாற்றத்தை நோக்கிச் செல்ல ஆசிரியரின் வகிபாகம் அளப்பரியது என்பது நிச்சயமானது.


பாடசாலைகளில் விழுமியப் பண்புகளை விருத்தி செய்வதில் பாடசாலை எதிர்கொள்ளும் சவால்கள். 

மனித வாழ்வினை வளமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் செம்மையான வகையில் வாழ்வதற்கும் விழுமியங்களும் அறக்கருத்துக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. விழுமியம் என்பது தனிமனித வாழ்விலும், சமூக வாழ்விலும் இன்றியமையாத ஒன்றாகும். மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை விழுமியப்பண்புகள் மனித வாழ்வில் பயணிக்கின்றன. குறிப்பாக மனித விழுமியங்களாக அன்பு, பரிவு, இரக்கம், நேர்மை, ஒழுக்கம், உதவிசெய்தல், அகிம்சை என பல உள்ளன. “கல்வியில் கிடைக்கப்பெறும் நன்மை யாதெனில் நல்ல மனிதனை உருவாக்குவது மட்டுமல்லாமல் அவர்களை நல்ல முறையில் செயலாற்றவும் செய்கிறது” என்ற கிரேக்க மெய்யியலாளர் பிளேட்டோவின் கருத்திற்கு இணங்க விழுமியப் பண்புகளை வளர்ப்பதிலும், விழுமியக்கல்வியை கோட்பாட்டு ரீதியிலும் செயற்பாட்டு ரீதியிலும் வழங்குவதிலும் பாடசாலையின் வகிபங்கு மிக முக்கியமானதாக காணப்படுகின்றது.

இன்றைய மாணவர்களே நாளைய சமூகத்தை ஆள்பவர்களாக வளரப்போகின்றனர். ஒரு பிள்ளை பிறந்து வளர்ந்து முதலில் சந்திக்கின்ற சமூகம் பாடசாலை சமூகமேயாகும். அது மட்டுமன்றி தமது வாழ்க்கைக்குரிய பண்புகளையும் எதிர்காலத்திற்கான கல்வியையும் முறையாக கற்றுக் கொள்கின்ற தளமும் பாடசாலையே ஆகும். ஒரு பிள்ளை பாடசாலை சென்றதும் அவனுக்கு அனைத்தும் ஆசிரியர்களாகி விடுகின்றனர். இவ் ஆசிரியர் மாணவருக்கு வெறுமனே ஏட்டுக்கல்வியை அல்லது புத்தகக் கல்வியை மட்டும் வழங்க முடியாது, வழங்கவும் கூடாது.

கற்பித்தல், ஓர் உன்னதமான தொழில் ஒரு கடினமானதும் மற்றும் சவாலான பணியாகும். தற்போதைய காலகட்டத்தில், கற்பித்தலில் புதிய முறைகளின் வருகை மற்றும் டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் கற்றல் கல்வித் துறையில் கால் பதித்துள்ள விதத்தில், ஆசிரியர்களின் பங்கும் காலப்போக்கில் பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. இன்று, மருத்துவம், கல்வி, அறிவியல், கலை மற்றும் பல துறைகளில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றங்களுடன் மாணவர்களை இனங்கண்டு கொள்ளும் கடினமான பணியை ஆசிரியர் எதிர்கொள்கிறார்.

தற்காலத்தில் சிறிய சிறிய விடயங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் உள்ள எத்தனையோ பிள்ளைகள் வகுப்பறைகளில் காணப்படுகின்றனர். இந்தப் பிள்ளைகளின் வாழ்வில் இன்பத்தையும் துன்பத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஒருவராக வகுப்பறை ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். அதுமாத்திரமன்றி சகபாடிகளுடனான உறவு, ஆசிரியர் - மாணவர் உறவு, மாணவர் - அதிபர் உறவு போன்றவை ஒரு பிள்ளையின் ஒவ்வொரு கட்டத்திலும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த முக்கியத்துவத்தை உணர்ந்து கல்வியை வழங்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு ஆசிரியருக்கும் பாடசாலைக்கும் உண்டு.


இன்று பணத்தைக் கொடுத்தால் கல்வியைப் பெற்றுக்கொள்ளத்தக்க ஒருநிலைமை ஏற்பட்டுள்ளதாலேயே ஒழுக்கவிழுமியங்கள் அடிமட்டத்திற்குச் சென்றுள்ளதாகக் குறிப்பிடுவோரும் உள்ளனர். ஒழுக்கம் உயிரிலும் மேலானது என்பதை வாய்ச்சொல்லில் மாத்திரமே கூறிக்கொண்டிருக்கின்றோம். அது நடைமுறையில் பேணப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. சமயங்கள், ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதன் அவசியம் பற்றி அழுத்தம் திருத்தமாகக் கூறப்பட்டிருந்தாலும் அவற்றைக் கடைப்பிடிப்போர் குறைவாகவே காணப்படுகின்றனர்.

தற்காலத்தில் தொழிநுட்பம் ஆட்கொண்டுள்ள உலகில் மாணவர்களை விழுமியத்தில் வளரச் செய்வது என்பது மிகவும் கடினமான செயலே ஆகும். ஆனால் இப்பணியை முழுமையாக பேணிக்காத்து முழுமையாகவும் கட்டுப்பாடுடனும் வழங்கக்கூடிய அதிகாரமளிக்கப்பட்ட ஒரே இடம் பாடசாலையே ஆகும். பாடசாலையில் கற்கும் நல்ல பழக்கங்களினாலேயே மாணவர்கள் சமூகத்திற்குச் சென்ற பிறகு செயற்படுத்தப் போகின்றனர். அதனால் பாடசாலையில் வழங்கப்படும் விழுமியப்பண்பு மிக முக்கியமானதே.

கல்வி வரலாற்றில் ஆரம்ப காலங்களில் குருகுலம் சென்று கல்வி கற்று வந்தனர். அக்காலத்தில் மாணவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாவும் குருவினுடைய சொல்லை தெய்வ வாக்காகவும் பணிந்து கல்வி கற்கும் மாணவர்களாகவும் இருந்தனர். அதற்கு உதாரணமாக ஏகலைவனைக் குறிப்பிடலாம். ஆனால் நாகரீகமும் தொழிநுட்பமும் வளர்ச்சியடைந்த இன்றைய காலகட்டத்தில் சமூகத்தினதும் மாணவர்களினதும் பழக்கவழக்கங்கள் மற்றும் செயற்பாடுகளும் மாற்றமடைந்துள்ளன. மாணவர்களின் வாழ்க்கைமுறை முற்றாக மாற்றமடைந்துள்ளதை தற்காலத்தில் காணலாம். 

எல்லா மாணவர்களுக்கும் குடும்பச் சூழல் வளமானதாக அமைவதில்லை. வறுமை, பெற்றோர்களை இழந்த நிலை, கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பமாக மாறிவிட்டமை, பெற்றோரின் வேலைப் பளு, தொலைபேசி, தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றின் பாவனை, நண்பர்களின் எதிர்மறையான பழக்கவழக்கங்கள், தந்தையின் அறிவுரை, வழிகாட்டல், தாயின் அரவணைப்பு என்பன சரியாகக் கிடைக்காமை என பல குடும்ப சூழ்நிலைகளுடன் அனேக மாணவர்கள் பாடசாலைக்கு வருகின்றனர். இவ்வாறான பின்புலங்களைக் கொண்ட மாணவர்களாலும் சமீப காலமாக நடைமுறை பாதிப்புக்கள் பல ஏற்படுகின்றன. மாணவர்களிடத்திலே போதைப்பொருள் பாவனை, மாணவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள், கீழ்படியாமை, பாடசாலைக்கு எதிரான வன்முறைகள் என்பன அதிகரித்துவிட்டன. இவ்வாறான நிலை பாடசாலை மட்டத்தில் விழுமியப் பண்புகளை விருத்தி செய்வதில் பெரும் சவாலாகும். 

பாடசாலையில் கற்கும் பெல்வேறு விதமான மாணவர்களையும் இனங்கண்டு விழுமியப் பண்புகளை வழங்குவது என்பது சவால் மிக்கதொரு பணியாகும். தத்தமது சமய ஒழுகலாறுகள் மற்றும் சமயக் கருத்துக்களை, அற விழுமியங்களை, பிள்ளைகளின் வாழ்க்கையைச் செம்மையாக்கும் வகையில் வழங்க வேண்டும். மேலும் பாடசாலைகளில் விழுமிய பண்புகளை பேணி ஒழுகும் பிள்ளைகளை பாராட்டும் விதமான ஊக்குவிப்புக்களை வழங்க வேண்டும். அதே போல் நெறி பிறழ்வான நடத்தைகளைக் கண்டித்தும் அதன் ஆபத்தினை உணர்த்தியும் நற்பண்புகளை அவர்களிடம் விதைக்க வேண்டும். ஒருவன் நல்ல விழுமியப் பண்புகளைக் கொண்டிராவிட்டால் அவன் எவ்வளவு கற்றாலும் அவன் கற்ற கல்வி பூச்சியமே. அதேவேளை வாழ்வில் ஒருவர் நல்ல விழுமியப்பண்புகளைப் பின்பற்றி வாழ்வாரேயானால் உலகம் அவரை போற்றும். அதை உதாரணமாக்கி வாழ்ந்த பெரியார்களாகிய அப்துல்கலாம், அன்னை தெரேசா, ஜவகர்லால் நேரு போன்றோர் பற்றிய அறிவையும் விளிப்புணர்வுகளையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். 

விழுமியப் பண்புகளை மாணவர்களில் விதைப்பது என்பது இலகுவான காரியமன்று. அதனை ஓரிரு நாட்களில் ஏற்படுத்திவிட முடியாது. கல்வியின் மகத்துவத்தையும் மனித வாழ்வின் உன்னத தன்மையையும் விளக்கி விழுமியப் பண்புகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” மற்றும் “ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” போன்ற கருத்துக்கள் விழுமியப் பண்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. அது மட்டுமன்றி உலகில் விழுமியப் பண்புகளை வழங்குவதில் சமய புனித நூல்கள் மிக முக்கியமாவை என்றே கூற வேண்டும். இவை மனித ஒழுக்க விழுமியங்களுக்கு தனி சிறப்புரிமையைக் கொடுத்துள்ளன. இந்துக்களின் வேத ஆகமங்கள், கிறிஸ்தவர்களது திருவிவிலியம், இஸ்லாமியர்களின் திருக்குர்ஆன், பௌத்தர்களின் திரிப்பிடகம் என அனைத்து புனித நூல்களுமே ஒருவர் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டிய விழுமியப் பண்புகளை மிக அழகாக எடுத்துக்கூறியுள்ளன. இவை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒரு பாடவிதானமாக கற்பிப்பதன் மூலம் விழுமியப் பண்புகளை மேம்படுத்தலாம். 

அது மட்டுமன்றி பாடசாலையில் சமத்துவம், சகோதரத்துவம் என எல்லோரும் சமமானவர்கள் என வலியுறுத்தும் விதத்திலாக சீருடை அணிந்து செல்கின்றனர். ஒவ்வொரு வெள்ளிகிழமைகளிலும் காலை கூட்டத்துடனான சமய ஆராதனைகள் விசேடமாக நடைபெறுகின்றன. பெரியோரை மதித்தல் மற்றும் உதவி செய்தல், அன்பாகப் பழகுதல், இயற்கையைப் பேணுதல், ஏழைகளுக்கு உதவுதல், ஒழுக்கமாக வாழுதல் என விழுமியக் கருத்துக்களைக் கூறும் பாடவிடயங்களை உள்ளடக்கியதாக பாடப்புத்தகங்கள் கல்வி அமைச்சினால் இலவசமாக அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன. உதாரணமாக ஆத்திசூடி, நன்நூல், குறுந்தொகை, திருக்குறள் போன்ற அறக் கருத்துக்களைக் கூறும் இலக்கியங்கள் தமிழ் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் நல்ல விழுமியங்களை எடுத்துக்கூறும் சமய பாடநூல்களும் வழங்கப்படுகின்றன.

அது மட்டுமன்றி எமது நாட்டை பொறுத்தவரையில் விழுமியப் பண்புகளை புகட்டுக்கூடிய  சமயக்கல்வி மாத்திரமே கலைதிட்டத்தில் புகுத்தப்பட்டுள்ளமை ஒரு வித குறைபாடாகும். விழுமியக் கல்வியோ பாலியல் ரீதியான கல்வியோ கற்பிக்கப்படுவது இல்லை. ஆனால் இந்தியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சமய கல்வி இல்லை. மாறாக விழுமியக்கல்வி மட்டுமே உண்டு. இது எங்கள் மதம் சிறந்தது உங்கள் மதம் சிறந்தது அல்ல என்ற வேறுப்பாட்டை விதைத்து விடும். ஆனால் விழுமிய கல்வி மட்டுமே சிறந்த சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நற்பண்புகளைப் போதிக்கின்றது.

தற்கால மாணவர்கள் ஆசிரியர்களில் முன்மாதிரிகளைக் காணக்கூடிய சந்தரப்பங்கள் குறைவாகக் காணக்கிடைக்கின்றமையும் எதிர்மறையான பண்புகளைக் கொண்டவர்களைக் காணக் கிடைப்பதும் ஒரு வித சவாலாகும். மாணவர்களிடையே விழுமியத்தை, விழுமியப் பண்புகளை ஏற்படுத்தும் ஆசிரியர்கள் வெறுமனே கற்றுக் கொடுப்பதில் மாத்திரம் நின்று விடாமல் விழுமிய பண்புகளைக் கடைப்பிடித்து தம் வாழ்வை முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும். ஆசிரியர்கள் மனவெழுச்சி, சமூக அக்கறை, தேசிய நலன்கள் மற்றும் நவீன மயமாதலுக்கு ஏற்ற வகையில் உலகத்தோடு ஒத்து வாழ்பவர்களாகத் திகழ வேண்டும்.

பெற்றோர் தம் பிள்ளை கற்றலில் உயர வேண்டும் என நினைக்கும் அதேவேளை பிள்ளைகளின் விழுமியப் பண்புகள் தொடர்பில் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை. “மனிதன் யாருமே தவறு செய்வதில்லை தவறு செய்ய காரணம் அவன் சரி, பிழை பற்றி அறிந்திராத காரணமே” என்று கூறும் ஒழுக்கவியலின் தந்தை சோக்ரட்டீஸ் கருத்துக்களுக்கு அமையவே மாணவர்களும் அவர்களுக்கு சமூகத்திற்கு ஏற்ற விழுமிய பண்புகளையும் அறக்கருத்துக்களையும் விழுமியக்கல்வியின் அவசியத்தையும் விளக்கி கூறி நாட்டிற்கும் சமூகத்திற்கும் நற்பிரஜைகளை பாடசாலைகள் உருவாக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் தமது பிள்ளைகள் வைத்தியர், பொறியியலாளர் என உயர் பதவிகளை வகிக்க வேண்டும் என நினைக்கிறார்களே தவிர, தம் பிள்ளை சிறந்த ஒழுக்கமுள்ள பிள்ளையாக வளர்கிறானா என அவதானிப்பது குறைந்து கொண்டு செல்கின்றது. 

அந்த நிலை மாற்றமடைந்து பாடசாலைகள் வெறுமனே பரீட்சைகளுக்கு மாத்திரம் மாணவர்களைத் தயார்படுத்தும் நிறுவனமாக அல்லாமல் சிறந்த மனிதனை உருவாக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இப்பணியை ஆசிரியர்களும் அதிபர்களும் பாடசாலை, சமூகம் மற்றும் பெற்றோரும் ஒன்றாக இணைந்து பொறுப்பாக தத்தமது கடமையாகக் கருதி மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நமது நாட்டில் வன்முறையற்ற, போதைப்பொருள் பாவனையற்ற து~;பிரயோகங்களற்ற ஒற்றுiமையும் நல்லிணக்கமும் மிக்க சமூகத்தை விருட்சமாக உருவாக்குவதற்காக விழுமியக் கல்வியை பாடசாலைகளில் நடைமுறைப்படுத்துதல் வேண்டும். 

பாடசாலையில் விழுமியக் கல்வியை நடைமுறைப்படுத்துவதில் ஆசிரியர்கள் nமிகப்பெரிய பங்கு வகிக்கின்றனர். இதனை அடைந்து கொள்வதில், மாணவர்களை நன்கு அறிந்து கொள்ளல், மாணவர்களின் வெவ்வேறு கற்றல் திறன்கள் மற்றும் திறன்களைப் புரிந்துகொள்ளல், மாணவர்கள் குறைவான செயல்திறன், பெற்றோர், சகாக்களின் அழுத்தத்தைச் சமாளிக்க வேண்டியிருக்கும் போது அவர்களை ஊக்குவித்து ஊக்கப்படுத்துதல் போன்றன ஓர் ஆசிரியர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களாகும். 

பொருளாதாரப் பிரச்சினைகள் விழுமியப் பண்பு விருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் ஒரு காரணியாகும். உழைப்பின்றி இருப்பது, செலவுக்கேற்ற வருமானத்தை தேடுவதில் க~;டம், வறுமை, நிரந்தர வருமானமின்மை, அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவு போன்ற பல காரணங்களால் ஒழுக்கவிழுமியம் தொடர்பான விடயங்களில் மக்கள் பலர் இப்போதெல்லாம் பெரிதாகக் கவனம் செலுத்துவதில்லை. பொருளாதார ரீதியாகக் க~;டப்படுகின்ற ஒரு கூட்டத்தினர் எவ்வாறாகினும் வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக எதுவும் செய்யத் துணிகின்றனர். இதற்காக களவு, பொய், ஏமாற்றுதல், மற்றவரை வருந்தச் செய்தல் போன்ற இன்னோரன்ன விடயங்களில் சிலர்; ஈடுபடுகின்றனர். அதேவேளை உண்மை வாழ்வுக்காக ஏங்குகின்ற ஒரு கூட்டத்தினரும் காணப்படு கின்றனர்.

இவ்வாறு பல்வேறுபட்ட வாழ்க்கை முறைமைகளைக் கொண்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் ஒன்றுசேர்ந்து பாடசாலகளில் கல்வியைக் கற்பதற்கு வருகின்றனர். ஒரு வகுப்பில் இருக்கும் ஒவ்வவொரு மாணவரும் அவரவர் பெற்றோரின் குணங்களைக் கொண்டுள்ளவர்களாகவே காணப்படுவர். ஆசிரியர்கள் பாடசாலைக்கான பொது ஒழுக்கக் கோவைகள், வகுப்பறை ஒழுக்கம், ஒழுங்குமுறைகள் போன்றவற்றை எடுத்தியம்பினாலும் வகுப்பிலுள்ள மாணவர்களில் ஒருசில மாணவர்கள் தங்களது நடத்தைக் கோலத்தை வித்தியாசமாகவே காண்பிப்பர்.

இது அந்த வகுப்பறையில் பல்வேறு பிரச்சினைகளையும் ஆசிரியருக்கு கடுமையான சவாலையும் ஏற்படுத்துவதுடன், பாடசாலையின் ஒழுக்க விழுமியக் கட்டுப்பாடுகளையும் மீறியதாகக் காணப்படும். கல்வியின் ஊடான ஒழுக்க விழுமியத்தை இவர்களுக்கு ஊட்டுவதும், அவர்களிடமிருந்து சரியான விழுமியத்தை எதிர்பார்ப்பதும் சிரமமாகவே காணப்படும். “ஒழுக்கநெறிகளை விரிவுபடுத்துவது ஒன்றே கல்வியின் நோக்கமாக இல்லாவிட்டாலும், அதுவே உயர்ந்த நோக்கமாக இருக்கிறது” என்று அறிஞர் ஒருவர் கூறிய கூற்றின்படி ஒழுக்கநெறியுடன் கூடிய சீர்கல்வியை ஒவ்வொரு பிள்ளையும் பெற்றுக்கொள்வது முக்கியமாகும். இதுவே ஒவ்வொரு மாணவனினதும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் முழுமையான பிரயோசனத்தை வழங்கும்.


பாடசாலைகளில் விழுமியப் பண்புகளை விருத்தி செய்வதில் பாடசாலை எதிர்கொள்ளும் சவால்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள்.

பாடசாலைகள் மாணவர்களுக்குரிய விழுமியப் பண்புகளை வழங்க வேண்டிய முக்கியதொரு இடமாகும். ஒரு பிள்ளையின் வாழ்வில் அவரது பெற்றோர் எந்தளவு கரிசனை காட்டும் பொறுப்பைக் கொண்டுள்ளார்களோ அதற்கு இணையாக இடம்சார் பெற்றோரான ஆசிரியர்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர். ஒவ்வொரு ஆசிரியரும் தான் கையாளும் ஒவ்வொரு மாணவரையும் செம்மையாக இனங்கண்டு அவரில் வாழ்க்கைக்கேற்ற விழுமியப் பண்புகளை விருத்தி செய்ய வேண்டும். இப்பணிகளை ஒரு பாடசாலை இலகுவாக மேற்கொண்டு விட முடியாது. சமூகத்தில் பல்வேறு சவால்கள் மாணவரில் விழுமியப் பண்புகளை மேம்படுத்துவதில் செல்வாக்குச் செலுத்தும். அவற்றை இழிவளவாக்கிக் கொள்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவதனூடே, ஒரு பாடசாலை மாணவர்களில் வெற்றிகரமாக விழுமியப் பண்புகளை உருவாக்கலாம். 

சமூகத்தில் பல்வேறு வகைப்பட்ட பாதிப்புக்களுக்குட்படும் மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில் சில வழிமுறைகள் கையாளப்படுகின்றன. ஒவ்வொரு ஆசிரியரும் பாடசாலையில் தாம் கற்பிக்கும் மாணவர்களை சிறந்த நற்பிரஜையாக உருவாக்க இலட்சியத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்ற வேண்டும். விழுமியப் பண்புகளை கலைத்திட்டத்தின் ஊடாகவும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் மூலமாகவும் வளர்க்க தேவையான தேர்ச்சிகளை புத்தாக்கம் செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர் மட்டுமல்லாது பெற்றோர்களும் விழுமியப் பண்புகளை மாணவர்களிடையே ஏற்படுத்துவதில் அக்கறை காட்டுதல் வேண்டும். 

ஒழுக்க விழுமியத்தை பாடசாலைகளில் முழுமையாக ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்து வருகிறது. கடந்த 1997 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட பொதுக் கல்விச் சீர்திருத்தங்களில் கல்வியின் ஊடாக சிறந்த ஒழுக்க விழுமியத்தைக் கொண்டுள்ள மாணவர் பரம்பரையை உருவாக்க முடியும் என்கிற கருத்துக்கிணங்க கலைத்திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது. அதன் குறிப்புரையில் விழுமியக் கல்வியும் தேசிய ஒருமைப்பாடும் என்னும் தலைப்பில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

“நல்ல ஒழுக்கமும் விழுமியங்களும் தனியான ஒரு பாடமாக கற்பிக்கப்பட முடியாதவை. இவை பாடசாலைக் காலம் முழுவதிலும் அனைத்துப் பாடங்களினூடாகவும் தொடர்ச்சியாகக் கற்க வேண்டியவையாகும்.” 

ஆரம்ப நிலையில் கற்கத் தொடங்கும் சமயமானது பொதுக்கல்விக் காலம் முழுவதிற்கும் சரியான விழுமியங்களையும் நல்லொழுக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு உதவுகிறது. இந்த அணுகுமுறைக்கூடாக மாணவர்கள் தங்களுடைய சமயத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் மற்றைய மாணவர்களின் சமய, கலாசாரங்களை அறியவும், அதற்கு மதிப்புக் கொடுக்கவும் கற்றுக் கொள்கிறார்கள். இலங்கையில் நீதியான சமூகத்தை உருவாக்குவதற்கு கல்வி முறையினது மேற்குறிப்பிட்ட அணுகுமுறையானது முக்கிய பங்கு வகிக்கிறது. 

மேலும், விழுமியக் கல்வியானது அதிபர், ஆசிரியர் மற்றும் சமூகத்தினருடன் மாணவர் கொண்டுள்ள உறவின் அடிப்படையிலேயே பெரிதும் தங்கியுள்ளது. கற்றல், கற்பித்தல் சூழல் சரியான முறையில் வடிவமைக்கப்பட்டால் சாதி, சமய, சமூக வேறுபாடுகளற்ற நீதியான நல்லதொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும். ஓர் குறிப்பிட்ட பாரம்பரியத்தின் அடிப்படையில் அல்லது அனைத்துலகக் கண்ணோட்டத் தோடு சரி எது, தவறு எது என்பதை அறியும் நிலையை மாணவன் அடைய வேண்டும்.

இன்று நடைமுறையில் காணப்படும் தேசிய கல்வி முறைமைக்கான இலக்குகளில் குறிப்பிடப்படுகின்ற தேசிய குறிக்கோள்கள், ஒழுக்கவிழுமியங்களின் முக்கியத்துவம் எந்தளவுக்கு கல்வியில் தாக்கம் செலுத்தியுள்ளது என்பதையும் நாம் அவதானிக்க வேண்டியுள்ளது. இலக்கம் கல்வி அமைச்சின் 2005ஃ17 ஆம் இலக்கச் சுற்றறிக்கை ‘பாடசாலைகளில் ஒழுக்க விழுமியங்களைப் பாதுகாத்தல்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது. “எதிர்கால சிறந்த பிரஜைகளை உருவாக்கும் பாடசாலைகள் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அறிவு மற்றும் திறமையை வழங்குவது மாத்திரமன்றி சமூக ஒழுக்க விழுமியங்களுடன் வாழ்வதற்குத் தேவைப்படும் சிந்தனைகள் மற்றும் ஒழுக்க விழுமியங்களை விருத்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியுள்ளது.

தற்போதைய சமூகத்தில் காணப்படும் சிறுவர் வன்முறை மற்றும் து~;பிரயோகங்கள் அதிகரித்துச் செல்லல் என்பன சீரற்ற விளைவுகளாகும். தற்போதைய சிக்கலான சமூக முறைமையில் பாடசாலை செல்லக்கூடிய மாணவர்கள் பாடசாலைகளிலும் பல்வேறுபட்ட நபர்களினாலும் க~;டங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இச் சம்பவங்களினால் பிள்ளைகளின் எதிர்காலம் இருள்மயமாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னல்களைச் செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங்களில் பாடசாலை முறைமை, அதிலிருக்கும் பணியாளர்கள், மாணவர்கள் போன்றோரும் உள்ளடங்குவதாகவும் இவற்றில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனவேதான் பாடசாலைகளில் ஒழுக்க விழுமியங்களைப் பாதுகாத்தல் தொடர்பில் பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டி இச்சுற்றுநிருபம் வெளியிடப்பட்டிருந்தது.


இதுபோன்று பல்வேறு சந்தர்ப்பங்களிலும் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும், ஒழுக்கம் சார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வந்திருந்தாலும் பாடசாலைகளில் ஒழுக்கம் சார்ந்த விடயங்கள் மாணவர்களுக்குப் பூரணமான வகையில் சென்றடைவதில் சில சிக்கல்கள் தோன்றியிருப்பதாக ஆசிரியர்களது தரப்பில் கூறப்படுவதும் உண்டு. மேலே கூறப்பட்டவாறு சில குடும்பத்துப் பின்னணியில் இவ்வாறான ஒழுக்கங்களை கடைப்பிடிப்பதில் இந்த மாணவர்கள் அசமந்தமாகவும் காணப்படுவர். அதேவேளை சில பாடசாலைகளில் ஆசிரியர்களே ஒழுக்கத்திற்கு கேடானவர்களாகவும் காணப்படுகின்றனர்.

தற்காலத்தில் மாணவர்களே புத்திமதி கூறும் அளவுக்கு சில ஆசிரியர்கள் நடந்து கொள்வதனால் மாணவர்கள் அது பற்றி ஏனையோரிடம் முறையிடும் அல்லது உரிவர்களிடமே பேசும் நிலைக்கு உள்ளாகின்றனர். இது உண்மையாகவே தவிர்க்கப்படுதல் வேண்டும், ஆசிரியரை மாதிரிகளாகப் பார்த்துப் பின்பற்றுகின்ற மாணவர்கள் பலர் வகுப்பறைகளில் காணப்படுகிறார்கள். எந்தவொரு பிள்ளையும் ஆசிரியரின் பாத்திரத்தினால் கவரப்படுவராக இருந்தால்; ஒழுக்கசீலனாக மாற்றம் காண்பான். இது ஆசிரியரின் நடத்தைப்பாங்கினால் தீர்மானிக்கப்படுகின்ற விடயமாகும்.

கடந்த 2009 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இலங்கையின் பொதுக் கல்விக்கான புதிய கல்விச் சட்டகம் தொடர்பாக உருவாக்கப்பட்ட குழுவின் சிபார்சுகளிலும் விழுமியக்கல்வி தொடர்பான விளக்கங்களும் வரைபுகளும் எடுத்தாளப்பட்டுள்ளன. அதாவது, கல்வியின் மரபு வழியானது முக்கியமாக சமயத்தை அடிப்படையாகக் கொண்டதுடன், குணவியல்புகளைக் கட்டியெழுப்புதல், ஒழுக்க மேம்பாடு மற்றும் விழுமியங்களைப் பதிய வைத்தல் என்னும் குறிக் கோள்களைக் கொண்டுள்ளது.

நவீன கல்வி முறைமையுடன் இணைந்த வகையில் அறிமுகம் செய்யப்பட்ட, பரீட்சையில் சித்தியடைவதன் மூலம் சான்றிதழ்களைப் பெறுவதற்கான போட்டியுடன், கல்விச் செயன்முறைகளில் விழுமியங்களை மேம்படுத்துவதற்கான வலியுறுத்தல்கள் தேய்வடைந்துள்ளன. தற்போதைய நிலைமையில் பிள்ளைகள் தன்மையமானவர்களாக, உணர்வுபூர்வமற்றவர்களாக, பொறுப்பும் பகிர்வும் அற்றவர்களாக விளங்கும் போக்கு காணப்படுகின்றது.

தேசிய கல்வி ஆணைக்குழுவின் அறிக்கை (1992) இன்படி, ஒருவர் நியமங்களுக்கு விட்டுக்கொடுக்கும் சுதந்திரம், அறிவுறுத்தல்களை அனுசரிக்காமை, ஏனைய மக்களின் சொத்துக்களில் உரிமை கொள்ளுதல், ஒருவரின் விருப்பத்தை ஏனையவரில் சுமத்துதல் போன்ற பொய்யான சுதந்திர உணர்வுகள் உருவாக்கப்பட்டுள்ளமை பற்றிக் குறிப்பிடப்படுகிறது.

எனவே கல்வியின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற ஒழுக்கவிழுமியங்களுக்கு ஆதாரமாக அமைகின்ற ஆசிரியர்களின் மனநிலையில் இதற்கான உறுதிப்பாடுகள் முனைப்பாக்கப்படுதல் அவசியமாகும். பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் அந்த மாணவர்களுக்கு உண்மைக்குண்மையாகச் சென்றடைய வேண்டும். ஒழுக்கவிழுமியம்மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்ப பாடசாலைகள் தம்மை முழுமையாக அர்ப்பணித்தல் வேண்டும். நவீனத்துவம்மிக்க இன்றைய காலத்தில் இன்சொல் வழியாக ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்குரிய கற்றலை மேற்கொள்வதன் ஊடாக நாடு எதிர்பார்க்கும் நற்பிரஜைகளை தோற்றுவிக்கலாம் என்பது உறுதி யாகும்.

பாடசாலைக் கல்விக் கொள்கைகளில் விழுமியம்சார் செயற்திட்டங்கள் மேலும்  இணைத்துக்கொள்ளப்படுவதற்கான முயற்சிகள் பாடசாலைகளால் மேற்கொள்ளப்பட வேண்டும். பாடசாலையின் நாளாந்த நடைமுறையாக அவை பயிற்றுவிக்கப்பட வேண்டும். பாடசாலை ஆசிரியர்கள் விழுமியச் செயற்பாடுகளை வெளிப்படுத்தும் முதல் நிலை முகவராகத் தெழிற்படும் சூழலை உருவாக்க வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை, பெற்றோர் இலக்குகள் என்பன விழுமியம் சார்ந்தவையாக மீளமைக்கப்படல் வேண்டும். வீட்டுச்சூழலிலை விழுமியம்சார் நடைமுறைகளை அமுல்படுத்த உதவும் அலகாக உருவாக்க விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள் பெற்றோருக்கு வழங்கப்பட வேண்டும். 

பாடசாலைகளின் கலைத்திட்டம், இணைக்கலைத்திட்டம், மறைக்கலைத்திட்டம் ஆகியவற்றில் விழுமியப் பண்புகளை மாணவர்களில் மேம்படுத்துவதற்கான அதிகளவான வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் வேண்டும். அத்துடன் இடம்சார் பெற்றோரான ஆசிரிர்யர்கள், மாணவர் சமுதாயத்திற்கு முன்மாதிரிகளாகத் திகழ வேண்டும். சமகால மாணவர்கள் மரபுவழி மாணவர்கள் போலன்றி எந்தவொரு விடயத்தையும் இலவாகவும் விரைவாகவும் கண்டறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏராளமாகக் காணப்படுவதனால் ஆசிரியர்களின் நடத்டதைச் செயற்பாடுகள் தொடர்பில் அவர்கள் அதிக கரிசனையுடன் காணப்படுகின்றனர். 

பாடசாலைச் சமூகம் இவ்விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்வதன் ஊடாக மாணவர்களுக்குப் பொருத்தமான பாடசாலைச் சூழுலை உருவாக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் தலையாய பொறுப்பாகும். சமூகத்தில் அருகிச் செல்லும் விழுமிய நடத்தைகளை விருத்திசெய்வதில் பாடசாலைகள் கூடிய கவனம் செலுத்ததல் வேண்டும். விழுமியம்சார் செயற்திட்டங்கள் சமூகத்தில் உச்ச அடைவை மாணவர்களிடையே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. எனவே பாடசாலைகளின் செயற்திட்டங்கள் விழுமியம்சார் இலக்குடன் பயணிக்கும்போது எதிர்காலத்தில் சிறந்த சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்ப முடியும்.


உசாத்துணைகள் 

1. சாய்குமாரிஇ க. (2008). மதிப்புணர்வுக் கல்வி. சாந்தா பப்ளி~ர்ஸ்

2. பாத்திமாஇ மு. இ ராம மூர்த்திஇ பி. (2010). அமைதி மற்றும் மதிப்புணர்வுக் கல்வி. ஸ்ரீ ஜீ.வி. பதிப்பகம்.

3. தனவதி, ச. (2017). மதிப்புணர்வு மற்றும் அமைதிக் கல்வி. சமியுக்தா பதிப்பகம். 


Post a Comment

0 Comments