இடைநிறுத்தப்பட்ட கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான தகலல்


கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிராகஇடைக்காலத்தடை வழங்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட வழக்கு இன்றுவிசாரணைக்கு வந்தது.

இன்று அந்த வழக்கில் சில முன்னேற்றங்கள் எட்டப்பட்டன. இதில் பாதிக்கப்பட்ட பட்டதாரிகளின் நலன் கருதி சில விடயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சென்ற 26.05.2024ம் திகதி , நியமனங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட பரீட்சாத்திகளின் பட்டியலும் பின்னர் இணையத்தில்அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு பரீட்சாத்தியும் தனது பெறுபேறுகளைப்பெறமுடியுமான பொறி முறையும் வெளியிடப்படிருந்தது.

தெரிவு செய்யப்பட்ட பட்டியலில் ஒருவர் பெற்ற புள்ளிகளுக்கும் இணையத்தில் அவரின் அடையாள அட்டை இலகத்தை உள்ளீடு செய்யும் போது வரும் புள்ளிகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்பட்டன. இது சம்பந்தமாக பிரதிவாதிகள் விளக்கமளிக்கையில் தெரிவு செய்யப்பட்டோரின் பட்டியல் கணனிப் பிசகு காரணமாக பிழையாக புள்ளிகள் உள்ளீட்டம் செய்யப்பட்டதாகவும் பரீட்சாத்திகளின்  அடையாள அட்டைகளை உள்ளீடு செய்துஇணையத்தில் பெறப்படும் புள்ளிகளே சரியான புள்ளிகள் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதோடுஇத்தவறு சம்பந்தமாக விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதனால் உங்களின் உண்மையான புள்ளிகள் உங்கள் அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து பெற்றபுள்ளிகளே.தற்போது அந்த இணைய பொறிமுறை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஜூன் மாதம் 25 மீண்டும் விசாரணைக்கு வருகிறது.அதற்கிடையில் பின்வரும் நடவடிக்கைகளைமேற்கொள்வதாக பிரதிவாதிகள் குறிப்பிட்டுள்ளனர். நீங்கள் செய்ய வேண்டியவை இதுதான்.

1. மீண்டும் இணையப் பொறிமுறை செயற்படும்.அதில் உங்கள் அடையாள அட்டையை இட்டு உங்களின் புள்ளிகளை இன்னொருமுறை அறிந்து கொள்ளுங்கள். அதனை இதற்கு முன்னர் இணையத்தில் நீங்கள் அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு பெற்ற புள்ளிகளோடு ஒப்பிட்டு பாருங்கள். அதில் வித்தியாசம் வருமாக இருந்தால் உடனே கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு மூலம் தெரிவியுங்கள்.

2.உங்கள் புள்ளிகள் வெளியிடப்பட்டு அவற்றை ஒப்பிட்டு, பரிசோதித்து தெளிவு பெற உங்களுக்கு ஒரு வாரகால அவகாசம் தரப்படும். அதற்குள் ஏதாவது பிரச்சினை இருந்தால் உடனே பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு செய்வதன் மூலம் தெரிவியுங்கள்.

3.நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் உங்கள் சான்றிதழில் effective date சம்பந்தமாக ஏதாவது குழப்பங்கள்நடந்து அல்லது பாடங்கள் சம்பந்தமாக ஏதாவது குழப்பங்கள் நடந்து நீங்கள் நேர்முகப் பரீட்சைக்கு நிராகரிக்கப்பட்டவராக இருந்தால் சரியான ஆவணங்களோடு மேன் முறையீடு செய்து மீண்டும் உங்களை நேர்முகப் பரீட்சைக்கு உள்வாங்க வேண்டுகோள் விடுங்கள்.

4. குழப்பங்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று ஒரு வலயத்தில் ஒரு பாடத்திற்கு எத்தனை வெற்றிடங்கள் இருக்கின்றது என்பது வெளியிடப்படாமையாகும். அந்த பட்டியலை நாம் பிரதி வாதிகளிடம் கோரியிருந்தோம். அதனை அவர்கள் வழங்கி இருந்தார்கள். அதனோடு நீங்கள் விண்ணப்பித்த பாடத்தின் வெட்டுப்புள்ளிகளோடு ஒப்பிட்டுப்பாருங்கள். குறிப்பிட்ட பாடத்திற்கு ஒரு மாவட்டத்தில் 10 பேர் தேவை என்றிருந்தால் நீங்கள் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் நீங்கள் 11வது ஆள் என்றால் நீங்கள் அப்பாட நியமனத்திற்கு தகுதியானவர் அல்ல.( பின்னர் வெளியிடப்படும்)

5. முக நூலில் அனாவஸ்யமாக எவரையும் விமர்சிப்பது, அரச உத்தியோகத்தர்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்துச் சொல்வது, நீதி மன்றக் கட்டளைகளை சாடுவது உங்களுக்கு ஆபத்தில் முடியும் எச்சரிக்கையாக இருங்கள்.

6. நீங்கள் நியமனத்திற்கு தகுதி இல்லை என்பது தெரிந்தால் அதனை ஏற்றுக்கொண்டு வேறு வழிகளைத் தேடுங்கள். உலகம் மிகவும் பரந்தது. அதில் உங்களுக்கு ஒரு இடம் இருக்கும்.

7. உங்கள் புள்ளிகளில் எதாவது குழறுபடிகள் இருப்பின் நீதி மன்றத்தை நாடு முன்னர் அவற்றைத் தீர்த்துக்கொள்ள மேன் முறையீடுகள் மூலம் முயற்சி செய்யுங்கள்.நீதிமன்றம் இறுதித் தீர்வாகவே இருக்க வேண்டும்.

8. தகுதியானவர்கள் குறிப்பிட்ட பதவியில் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களைத் தெரிவு செய்யும் வெளிப்படைத் தன்மை கொண்ட பொறி முறை வேண்டும் என்பதுதான் எமது போராட்டம். அப்படித் தகுதியானவர்கள் நியமனத்தை  மனதார ஏற்றுக்கொண்டு அவர்கள் கடமையைச் செய்ய வழி விடுங்கள்.

9.இந்த விடயத்தில் குரல்கள் இயக்க Voices Movementசட்டத்தரணிகள் பலர் உங்களுக்காக அவர்களின் நேரங்களை செலவிட்டு நீதிமன்றங்களில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள். அது போதுமானது.

Razzi Mohammed-Voice Movement

Post a Comment

0 Comments